ஞாயிறு, 23 ஜூன், 2024

அருண்மா மகள் கட்டளைக் கலித்துறை

அருண்மா வலையறு மங்கை யரசற் கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசர்க்  கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசற்  கடிபணிய
வருண்மா வலையறு மங்கை யரசற் குரைக்கணுமே
#கட்டளைக்கலித்துறை



அருள் மா வலை அறு மங்கை அரசன்கு அருள் மொழிந்த (திருமங்கை ஆழ்வாருக்கு)
அருள் மா வலை அறும் அங்கு ஐ அரசர்க்கு அருள் மொழிந்த (பாண்டவர்களுக்கு)
அருள் மா அலை அறு மங்கை அரசற்கு அடிபணிய (இலக்குயின் அரசனான திருமாலுக்கு)அருள் மா அலை அறும் மங்கை அரசற்கு உரைக்கணமே

அருள் மிக்கு இருந்தும் வலையை வைத்து அறுக்கும் வழிப்பறி செய்து கொண்டிருந்து திருமங்கை மன்னற்கு  ( ஆழ்வாருக்கு) அருள் மொழிந்த ( அஷ்டாக்ஷர மந்தரம்)

அருளும் பெருமையும் கொண்ட, கவுரவர்களின் சூழ்ச்சியை அறுத்து எறியும் பாண்டவர்களுக்கு (ஐந்து அரசர்கள்) மஹாபாரதத்தில் அருள் மொழிந்த (என்றுமே காத்து நின்ற)

அருளின் ஊற்றாக விளங்கும் , கடலின் வழி வந்த திருமகளின் அரசனான திருமாலுக்கு அடிபணிய ( நாம்)

அவ்வருள் ஊற்றாக விளங்கும் அலை மா மகள் தன் அரசனான திருமாலுக்கு புருஷகாரம் செய்ய வேண்டும் , அப்போது தான் ஆக்களுக்கு திருமாலைத் தொழும் அளியே கிட்டும் (இலக்குமி திருமாலிடம் உரைத்து நமக்கு கதி அளிக்க வேண்டும்)



பாண்டவர்களுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் அருள் பாலித்த திருமாலுக்கு இலக்குமியின் புருஷகாரம் இன்றி நாம் அடிபணிய முடியாது என்பது கருத்து

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...