திங்கள், 22 ஜூலை, 2024

பார்ப்பொடுக்கும் அன்னை அன்பு கலி விருத்தம்

பார்ப்பொடுக்கு மன்னையன்பு பார்கொடுக்க வீடதோ
வார்பரிக்கும் வாழ்வுகந்து போர்தொடுக்கு மூட(ர்)காள்
கூர்படுத்த  சிந்தைநன்று  சீர்படுத்த பண்பையும்
நேர்படுத்து மன்னவன்பி னீர்ப்பெடுத்து வாழியே  
#கலிவிருத்தம்

சீர் பிரித்து

பார்ப்பு ஒடுக்கும் அன்னை அன்பு பார் கொடுக்க ஈடதோ
ஆர்ப்பரிக்கும் வாழ்வு உகந்து போர்தொடுக்கும் மூடர்காள்
கூர் படுத்த சிந்தை நன்று சீர் படுத்த பண்பையும்
நேர் படுத்தும் அன்ன அன்பின் ஈர்ப்பு எடுத்து வாழியே

 

 

பார்ப்பு - பறவைக் குஞ்சு 

தனது குஞ்சுகளைத் தனக்குள்ளே ஒடுக்கிக் காக்கும் அன்னைக்கு இப்பாரை விலையாகக் கொடுக்கினும் ஈடாகுமோ? ஆர்ப்பரிக்கும் அவசர வாழ்வை விரும்பி அதனால் போரும் தொடுக்கின்ற மூடர்களே (மனிதர்களே) , உங்களது சிந்தையைக் கூர் படுத்தவும் , பண்பைச் சீர் படுத்தவும் நேர்வழிப் படுத்தும் இவ்வன்னப் பறவையின் அன்பின் வெளிப்பாட்டில் ஈர்ப்பு கொண்டு திருந்தி வாழ்வீர்களாக !

 

The love shown by the mother bird which shields its younger ones within itself, is so great that the world will also be not a fair price for it! Driven by the hustle and pace of life, oh fools ( humans) you declare wars amongst yourself. In order to sharpen your intellect and set right your humane qualities like love, learn from the love of this swan and live a changed life!  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...