ஞாயிறு, 7 ஜூலை, 2024

இறை யிரை சிலேடை வெண்பா

சுட்டாவி தட்டிட்டுச் சாம்பாரிற் றோய்த்தெடுக்கச்
சட்டினிக்கும் பொங்கல் பொருதுவக்கு - மிட்டவுண
வாழ்ந்திருக்கப் பத்தனுளத் தாழ்குரலை மெய்ப்பிக்கப்
போழ்துவந் தூண்பிளந்தான் போக்கு



பொருள் 1

சுட்டு ஆவி தட்டு இட்டு சாம் பாரில் தோய்த்து எடுக்க
சட்டு இனிக்கும் பொங்கல் பொரு துவக்கும் இட்டு அவுண
ஆழ்ந்து இருக்க பத்தன் உள்ளத்து ஆழ் குரலை மெய்ப்பிக்க
போழ்து வந்து ஊண் பிளந்தான் போக்கு  
 

சுட்டு ஆவி தட்டு இட்டு {இவ்வுயிரை பல பிறவியின் அனுபவங்களால் சுட்டு அதன் மேல் பல தட்டுகளால் (கோசங்களால்)  உடல் அமைத்து} சாக்காடு உள்ள இப்பாரில் தோய்த்து எடுக்க சட்டு இனிக்கும் (முதலில் இனிக்கும்) பிறகு பொங்கல் பொரு துவக்கும் (சண்டைகள் பொங்கும் -இருமை தத்துவம் ) ஆதலால், இட்டு அவுண(ன்)-
சிறுமையாக வாழ்ந்திருக்கும் அவுணனைத் , தனது பக்தன் உள்ளத்து ஆழ்குரலை உணர்ந்து மெய்ப்பிக்க போழ்து வந்து (தூணைப் பிளந்து வந்து) ஊண் பிளந்தான் (தனது இரையாகப் பிளந்தான் - நரசிம்மன்) அவனே போக்கு என்று உணர்வாயாக

☀ SHRI LAKSHMI NARASIMHA ॐ ☀ “O all-powerful, ocean of ...

பொருள் 2

சுட்டு ஆவி தட்டு இட்டு சாம்பாரில் தோய்த்து எடுக்க
சட்டினிக்கும் பொங்கல் பொருது உவக்கும் இட்ட உணவு
ஆழ்ந்து இருக்க பத்தன் உள்ளத்து ஆழ் குரலை மெய்ப்பிக்க
போழ்து உவந்து ஊண் பிளந்தான் போக்கு

ஆவியில் சுட்ட இட்டிலியைச் சாம்பாரில் தோய்தெடுக்கச், சட்டினிக்கும் பொங்கல் பொருது உவக்கும் (பொருந்தி மகிழும்) இஷ்ட உணவு ஆழ்ந்திருக்க (அவ்வுணவின்) பத்தனின் உள்ளத்து ஆழ்குரலை மெய்ப்பிக்க போழ்து உவக்கும் (அப்பொழுதானது உவப்பாக இருக்கும்) அவன் உணவைப் பிளந்து உண்ணும் கணம்

படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...