திங்கள், 15 ஜூலை, 2024

பெரியாழ்வார் வெண்பா

அம்மானுக் கம்மானா யம்மாவிற் கம்மாவாய்
பெம்மாற்குப் பல்லாண்டு பாட்டளித்தா  னம்மானை
மீதேறி  வீதியுலா வந்தகணம் விட்டுசித்தன்
வாதேறாய் வெற்றிநடை போட்டு 
 

சீர் பிரித்து 

அம்மானுக்கு அம்மானாய் அம்மாவிற்கு அம்மாவாய்
பெம்மானுக்கு பல்லாண்டு பாட்டு அளித்தான் அம் ஆனை
மீது ஏறி வீதி உலா வந்த கணம் விட்டுசித்தன்
வாது ஏறாய் வெற்றிநடை போட்டு

பொருள் 

பெருமாட்கு அன்னையாகவும் இருக்கின்றார் (பிள்ளைத்தமிழ் அவர்க்கு பாடியதால்), அவருக்குப்  பெண்ணைத் தந்த மாமனாகவும் இருக்கின்றார் பெரியாழவார். அவர் வாதத்தில் வென்று பொற்கிழி பெற்று ஒரு அழகிய ஆனையின் மீதேறி வீதி உலா வந்து கொண்டிருக்கும் போது பெருமாள் கருடவாகனத்தில் தோன்றினார், அப்போது பல்லாண்டு எனும் பாசுரம் பிறந்தது விஷ்ணு சித்தர் திருவாக்கில்   

 

அம்மான் அம்மா என்னும் இரு சொற்களும் பெருமானையும் குறிக்கும் படியாக அமைந்தன 



படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...