குடத்திருந்த வெண்ணையைக் குடித்துவந்த வாயனே
குடத்திருந்தை யென்பதாற் கொடுத்துவீடு தாயுளங்
குடத்திருந்த சிற்றுயிர்க் கொடுங்கணைக்கண் காத்தனைக்
குடத்திருந்து ழற்பிறப் பறுக்கவல்லை யல்லையே
சீர் பிரித்து
குடத்து இருந்த வெண்ணையைக் குடித்து உவந்த ஆயனே
குடத்து இருந்தை என்பதால் கொடுத்து வீடு தாய் உ(ள்)ளம்
குடத்து இருந்த சிற்றுயிர்க் கொடும் கணைக் கண் காத்தனைக்
குடத்து இருந்து உழல் பிறப்பு அறுக்க வல்லை அல்லையே
பொருள்
குடத்தில் வைத்திருக்கும் வெண்ணையை உண்பதுனக் குவப்பைத் தரக்குரிய லீலை நீ ஆயனாக வந்த போது, ஒரு குயவனின் கடத்தில் நீ ஒளிந்திருந்ததாலதற்கு வீடு பேறு தந்ததுனது தாயுள்ளத்தின் வெளிப்பாடு கருவிலிருந்த பரிக்ஷித்தைக் காத்தாய் அதே போன்று பிறவிச் சுழலிலுழலுமாக்கு வீடளிக்க வல்லவன் நீ அன்றோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக