1.
வென்றுலாவ மயிலுமில்லை வேகமாள வழியிலை
யென்றபோதுங் குன்றிருந்து பெற்றவம்மை
யப்பரை
நின்றுலாவ லோகமேழு நீக்கமின்றி சுற்றிய
வுன்றனண்ண னென்பதாலே வோங்குபுத்தி யுள்ளதே
சீர் பிரித்து-
வென்று உலாவ மயிலும் இல்லை வேகம் ஆள வழி இல்லை
என்ற போதும் குன்று இருந்து பெற்ற அம்மை அப்பரை
நின்று உலாவ லோகம் ஏழும் நீக்கமின்றி சுற்றிய
உன்றன் அண்ணன் என்பதாலே ஓங்கு புத்தி உள்ளதே
2.
சென்றுதேடி ஞாலமேழுஞ் சீருடைத்த கனியினைக்
குன்றடைந்து முனியளிக்க கன்றுமான குருவுனக்
கின்றளிக்க வேற்றமில்லை யென்பதாலே யீகிலை
மன்றிலாடு நாதர்காதின் மந்திரஞ்சொ னாதனே
சீர் பிரித்து-
சென்று தேடி ஞாலம் ஏழும் சீர் உடைத்த கனியினைக்
குன்று அடைந்து முனி அளிக்க கன்றும் ஆன குரு உனக்கு
இன்று அளிக்க ஏற்றமில்லை என்பதாலே ஈகிலை
மன்றில் ஆடும் நாதர் காதின் மந்திரம் சொல் நாதனே
3.
சத்திவேலுஞ் சுற்றுபுள்ளுஞ் சேவலங்கொ டிக்கிறை
சித்துலாவுங் குன்றடைந்து சீர்துறந்து நின்றதேன்
பித்துலாவும் பேதையெங்கள் பாழ்வினையைப் போக்கவோ
முத்துலாவும் பல்லுடைத்த தேவசேனை நாதனே
சீர் பிரித்து-
சத்தி வேலும் சுற்று(ம்) புள்ளும் சேவல் அம் கொடிக்கு இறை
சித்து உலாவும் குன்று அடைந்து சீர் துறந்து நின்றது ஏன்
பித்து உலாவும் பேதை எங்கள் பாழ் வினையைப் போக்கவோ
முத்து உலாவும் பல் உடைத்த தேவ சேனை நாதனே
4.
சுற்றமுண்டு சொத்துமுண்டு சோர்விலாத சுகமுடன்
கொற்றமுண்டு கூத்துமுண்டு கொஞ்சுமேக கயிலையிற்
குற்றமென்று கோப(ம்)கொண்டு குற்றடைந்து நின்றிடின்
பெற்றநெஞ்ச முற்றநோவைச் சற்றுமெண்ணு பாலனே
சுற்றம் உண்டு சொத்தும் உண்டு சோர்வு இல்லாத சுகமுடன்
கொற்றம் உண்டு கூத்தும் உண்டு கொஞ்சும் மேக கயிலையில்
குற்றம் என்று கோபம் கொண்டு குன்று அடைந்து நின்றிடின்
பெற்ற நெஞ்சம் உற்ற நோவைச் சற்றும் எண்ணு பாலனே
https://www.youtube.com/watch?v=8T6LtG5fmbg
கவியரசரின் பாடலின் தாக்கத்தில் ஔவையின் கூற்றாக முயன்ற கலி விருத்தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக