புதன், 4 செப்டம்பர், 2024

உம்பர் வாழ கலி விருத்தம்

உம்பர்வாழ சூரன்மாய வந்துதித்த மேதினி
யம்புலாவு நாகமேந்து தும்பைமேவு மார்சடை
சம்புநாத னெற்றியுற்ற சண்முகத்து நித்தியா
கம்புலாவுங் காட்சிதந்த நாதருக்கு நாதனே 

 

 

உம்பர் வாழ சூரன் மாய வந்து உதித்த மேதினி
அம்பு உலாவும் நாகம் ஏந்து தும்பை மேவும் ஆர் சடை
சம்பு நாதன் நெற்றி உற்ற சண்முகத்து நித்தியா
கம்பு உலாவும் காட்சி தந்த நாதருக்கு நாதனே 

அம்பு - நீர் ( இங்கு கங்கையைக் குறிக்கின்றது)

கங்கையும் , நாகமும், தும்பையும் மேவும் அழகிய சடையை உடைய சிவ பெருமான் நெற்றியில் (உதித்த தீயினில்) பிறந்த ஆறு முகங்கள் கொண்ட நித்தியனே , நீ தேவர்கள் வாழும் பொருட்டும்  சூரன் மாயும் பொருட்டும் வந்து உதித்த இவ்வுலகில் , கம்பத்து இளையனாராக காட்சி தந்த அருணகிரி நாதரின் தலைவன்  அன்றோ !

Arunagirinathar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...