புதன், 4 செப்டம்பர், 2024

தோற்றமிலா வெண்பா

தோற்றமிலா மாற்றமிலா வீற்றுமிலாக் கூற்றவற்கே
கூற்றளித்த வேற்றுடைய மேற்றவத்தான் - போற்றுமகிழ்
கந்தகுரு சந்தமிகு முந்துதமிழ் வந்தனைசெய்
சிந்தைவரத் தந்துவப்பா யுந்து

 

தோற்றம் இல்லா மாற்றம் இல்லா ஈற்றும் இல்லா, கூற்றவற்கே
கூற்று அளித்த, ஏற்றுடைய மேல் தவத்தான், போற்றும் மகிழ்
கந்த குரு சந்தம் மிகு முந்து தமிழ் வந்தனைசெய்(ய)
சிந்தை வரத் தந்து உவப்பாய் உந்து

 Who is Lord Murugan? – Saivite Scriptures

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...