வியாழன், 24 அக்டோபர், 2024

பத்திழிந்து கலி விருத்தம்

பத்திழிந்து பாரடைந்து பத்திஞான மாகம
முத்தளித்து நன்மைகாத்து முற்றழிக்க வல்லவை 
சித்தமர்ந்த சித்தமர்ந்த சுத்தமான சத்துவா
வித்தொழிந்து முத்திகாண வித்தையான சத்தியே  


சீர் பிரித்து

பத்து இழிந்து பார் அடைந்து பத்தி ஞானம் ஆகமம் 

முத்து அளித்து நன்மை காத்து முற்று அழிக்க அல்லவை

சித்து அமர்ந்து அசித் அமர்ந்த சுத்தமான சத்துவா 

வித்து ஒழிந்து முத்தி காண வித்தை ஆன சத்தியே  

 பொருள்

பத்து அவதாரங்கள் எடுத்து பாரின் கண் இறங்கி வந்து பத்தி ஞானம் ஆகமம் என்ற முத்தெல்லாம் அளித்து நல்லவையைக் காத்து அல்லவையை அழித்து , சித் அசித் இரண்டிலும் வியாபித்த சுத்தமான சத்துவ குணம் உடைய எசுவரனே! பிறப்பு என்னும் வித்தை அழித்து முத்தி அளிக்கக் கூடிய கல்விக்கான சத்தியும் நீ தானே !   

You descended as ten Avatars on the earth and gave us the pearls of Bhakti, Jnana and Agama and protected the good and destroyed evil, you are the Satvic Easwara who exists in Chith (sentient) and Achith (insentient) and you are the source knowledge of salvation which you grant by removing the seed of birth/death!

 

படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...