சனி, 26 அக்டோபர், 2024

பையரவம் சாழல்

பையரவக் குடையின்கீழ் பாலாழித் துயில்கின்றா
னுய்யவர மருள்வானென் றுரைக்கின்றா யென்னேடீ
செய்யவரம் பரமபதம் பையரவ நமக்கருளுஞ்
செய்யவளும் பாலாழிச் சிறுமியன்றோ சாழலோ   

தரவுகொச்சகக் கலிப்பா #சாழல்    

சீர் பிரித்து

பை அரவக்  குடையின் கீழ் பால் ஆழித் துயில்கின்றான்
உய்ய வரம் அருள்வான் என்று உரைக்கின்றாய் என்னே டீ
செய்ய வரம் பரமபதம் பை அரவம் நமக்கு அருளும்
செய்யவளும் பால் ஆழிச் சிறுமி அன்றோ சாழலோ
  

 பொருள் 

நாகக் குடையின் கீழ் பாற்கடலின் கண் துயில் கொள்ளும் 

திருமால் நமக்கு உய்ய வரம் அருள்வான் என்கிறாய் , அது என்னை   ?

செம்மையான வரமான பரமதத்தை ஆதி சேஷனின் அவதாரமானஎம் பெருமானார் நமக்கு அருள்கின்றார் , பாற்கடலின் மகள் தான் திருமகள் என்றும் நீ அறியவில்லையோ 

Girl 1- Question

He sleeps under the serpent umbrella in the ocean of milk, you say he will grant us salvation, how is this?

Girl 2- Answer

The serpent Adi Sesha incarnates as Ramanuja to grant us Parama Pada and the milky ocean is from where the Goddess Sri (Lakshmi) emerged, don't you know this? 

படம்

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...