வியாழன், 31 அக்டோபர், 2024

வடிவுடை அறு சீர் விருத்தம்

 

வடிவுடை யரசியுன் சகடமதை 
யதிரடி கடவிய தினமதனி
லிடருறு மிருபுவி விடியவென 
விலகென நரகனை விழவைத்த
வெடிவிட விதியுள விடியலதி 
லிடியென வதிரிடும் வெடியிலையே
கொடு(ங்)கலி தலையெழ விதுநிகழ 
மலையனு மிரவொரு குறையிலையே
 
 
இடர் உறும் புவி விடிய (வேண்டும்) என இலகுவாக நரகனை (நரகாசுரனை) வீழ்த்திய
வடிவுடைய அரசியான (சத்தியபாமா) உனது தேரை அதிரடியாக கடவிய தினத்தில் (தீபாவளி நாளில்)
வெடி விடக் கூட விதி சமைக்கப் பட்ட இக்காலத்தில், இடி அதிரும் படியான் பெருவெடிகல் ஏதும் வெடிக்கப் படுவதில்லை
கடுங்கலி என்பதால் இவ்வாறு நாம் இழிந்துள்ளோம் (வெடித்துத் தீபாவளி கொண்டாடக் கூட வழி இன்றி) , என்றாலும் (ஏழு) மலையன் நம்மோடு இருப்பதால் நமக்கொரு குறையும் இல்லை (கலியுக வரதனாக அவன் நம்மைக் காப்பான்)
 
based on this metre and tone set by the following poem 
 
 
 
படம் 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...