வியாழன், 31 அக்டோபர், 2024

திரோதான வெண்பா

 

திரோதான மாளுந் திருமக டாமே
திரதனந் தந்தருளுந் தெய்வம் - விரோதிக
ளைவ ரொருமுகத் தாண்டு பரகதிசேர்ந்
துய்வதற் கூன்றா முயிர்க்கு
 
 
சீர் பிரித்து :-
திரோதானம் ஆளும் திருமகள் தாமே
திர தனம் தந்து அருளும் தெய்வம் விரோதிகள்
ஐவர் ஒரு முகத்து ஆண்டு பரகதி சேர்ந்து
உய்வதற்கு ஊன்றாம் உயிர்க்கு
 
பொருள் :- 
திரோதானம் - மறைத்தல்
திர தனம் - நிலைக்கும் செல்வமான வீடுபேறு
மறைத்தல் செய்தருளுந் திருமகளே நிலைபெறுஞ் செல்வத்தையு மருள்கின்றா ரெதிரிகளாகிய வைம்புலன்களையு மொருமுகப் படுத்திப் பரகதியைச் சேரத் துணையாகவு நிற்கின்றா ருயிர்க்கு
Goddess Sri, who rules the Tirodhana (veiling) shakti also gives one the permanent wealth (of salvation). She helps in unifying the internal enemies(five senses) in working towards the ultimate salvation , and plays her part in guiding the souls towards liberation
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...