புதன், 30 அக்டோபர், 2024

காத்திருந்து கலி விருத்தம்

 

காத்திருந்து நோற்றிருந்து காட்சிவேண்டி நாதனை
நாத்திருந்து பாத்தொடுக்க ஞானமேது மில்லையே
பூத்திருந்து புந்தியுள்ளே சித்தசுத்தி நோக்கிலை
சாத்துணிந்து நாதபாதம் யாவுமென்று தந்திடே
 
 
காத்து இருந்து நோன்பு நோற்று இறைகாட்சி வேண்டி செம்மையான பாக்களால் ஆராதிக்க ஞானமும் இல்லை,மனத்தை உண்முகப்படுத்திச் சித்தத்தைச் செம்மைப் படுத்தி இறைச்சிந்தையில் செலுத்த அத்றகு வேண்டிய திறனுமில்லை, (ஆதலால்) சாகத் துணிந்து (வாழ்வோ சாவோ யாதாயினும்) அது நாதன் பார்த்துக் கொள்வான் என்று அவனிடமே யாவையும் அர்ப்பணிப்பேம்
To patiently wait undergo austerities and garland God by wonderful poems to see him is beyond me, to quieten the mind and sit still in one pointed thought of God also is beyond reach, so , whether life or death surrendering everything unto his feet is the way
 
May be an image of text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...