செவ்வாய், 5 நவம்பர், 2024

வானகத்து விருத்தம்

வானகத்த ராவடைந்து வையகத்தை யேற்றவே
       வைணவத்தை யாச்ரயித்து மானுடற்க ளுய்யவே
தேனுகுத்த மிழ்மொழிந்து பதேசரத்ன மாலையுந்
      தமிழ்மறைக்கு நூறுசாற்றந் தாதிமாலை யமுதமுங்
கோனகத்து வழிவகுக்க மேதினிக்கு நீதர
      கோவில்வாழ ரங்கனுன்ற னேற்றமான தனியனை
நானிலத்து மாந்தர்யாவுங் காலகால முள்ளவே
      மாமுனிக்குப் போற்றிசைத்த கீரத்திகூற லாகுமோ    

 எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

 

வானகத்து ஆரா அடைந்து வையகத்தை ஏற்றவே 

வைணவத்தை ஆஸ்ரயித்து மானுடர்கள் உய்யவே 

தேன் உகுத் தமிழ் மொழிந்து உபதேச ரத்ன மாலையும் 

தமிழ் மறைக்கு நூறு சாற்று அந்தாதி மாலை அமுதமும் 

கோன் அகத்து வழி வகுக்க மேதினிக்கு நீ தர 

கோவில் வாழ் அரங்கன் உன்றன் ஏற்றமான தனியனை 

நானிலத்து மாந்தர் யாவும் கால காலம் உள்ளவே 

மாமுனிக்குப் போற்று இசைத்த கீர்த்தி கூறல் ஆகுமோ   

 

When the serpent Adi Sesha decided to lift up the world, make the humans take up the lofty ways of Vaishnavam, composed Upadesa Rathna Malai and Thiruvaimozhi Nootrandhadhi in honey filled Tamil to let the humans understand the way to his Lords abode! In return , Azhagiya Manavala Perumal in Srirangam, came and composed a salutation for him ( The Lord took him as a Guru) so that the world can sing his praises for as long as time remains, is it even possible to enlist the greatness of the great Manavala Mamuni!

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...