செவ்வாய், 21 ஜனவரி, 2025

ஹனுமான் விருத்தம்

 


வேலைதாண்டி சீதைகாண வேண்டிசென்ற சேவகன்
வெற்படைந்தி லங்கைவந்து நோக்கியிங்கு நின்றனன்
சோலைசென்ற சோககானஞ் சேருமுன்னர் நின்றனன்
சோர்வடைந்த தேவிகண்டு தேவன்மோதி ரந்தர
வாலைநன்று யர்த்திவைத்து தன்னிருக்கை செய்திடச்
ஜ்வாலைகொண்டு தென்னிலங்கை வெந்தழற்பொ சுங்கிடக்
காலைவென்ற ராமபத்தன் கோவினின்ற ஊரிதே
காணயென்றுந் தோல்வியில்லை வெற்றிமீது வெற்றியே
 
 
சீர் பிரித்து
வேலை தாண்டி சீதை காண வேண்டி சென்ற சேவகன்
வெற்பு அடைந்து இலங்கை வந்து நோக்கி இங்கு நின்றனன்
சோலை சென்று அசோக கானம் சேரும் முன்னர் நின்றனன்
சோர்வு அடைந்த தேவி கண்டு தேவன் மோதிரம் தர
வாலை நன்று உயர்த்தி வைத்துத் தன் இருக்கை செய்திடச்
ஜ்வாலை கொண்டு தென் இலங்கை வெந்தழல் பொசுங்கிடக்
காலை வென்ற ராம பத்தன் கோவில் நின்ற ஊர் இதே
காண என்றும் தோல்வி இல்லை வெற்றி மீது வெற்றியே
 
The devotee who came to find Seetha Devi crossing the ocean came to this hill first, before going to meet and cheer up the desolate Devi by giving Sri Rama's ring, and later going on to use his own tail to form his own seat in the court of Ravana and later went on to burn southern Lanka to ashes, that Rama Bhakta Hanuman who has complete mastery over Prana remained in this hill abode to grace his devotees with unflinching victories!
 
May be an image of 8 people and temple 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...