செவ்வாய், 21 ஜனவரி, 2025

நிலத்தினில் சீதையம்மன் விருத்தம்

 

சீதையம்மன் விருத்தம்
நிலத்தினி லுதித்து நிலத்தினின் மறைவா
ணிசிப்பக லகத்த னினைப்பினி லுறைவா
ணெருபென செருக்க ணரக்கனை யெரிக்க விருந்தாலுஞ்
சலத்தினை விழிக்குள் வெளத்தென பெருக்கந்
தனித்துயர் தனக்குஞ் சகித்திரு விருப்பந்
தலைக்கர மிருக்குந் தனிச்சிலை விழுப்பங் குறையாது
வலத்தினி லிருக்குந் திருப்பொலி மகட்கும்
மருப்பொடு முகுந்த னுயர்த்திடு மகட்கு
மிணைத்தொரு மனித்த வுருத்தரு விழைவாலே
தலத்தினி லுறைந்து வளிச்சுதன் பதித்த
தடத்தினை யுடைத்த விசும்பன நிறத்தா
னிலக்குவ னொடிணைந்த விலங்கையின் மலைக்க ணொளிர்வோளே
 
 
சீர் பிரித்து
நிலத்தினில் உதித்து நிலத்தினில் மறைவாள்
நிசிப் பகல் அகத்தன் நினைப்பினில் உறைவாள்
நெருப்பு என செருக் கண் அரக்கனை எரிக்க இருந்தாலும்
சலத்தினை விழிக்குள் வெ(ள்)ளத்து என பெருக்கம்
தனித் துயர் தனக்கும் சகித்திரு விருப்பம்
தலைக் கரம் இருக்கும் தனிச் சிலை விழுப்பம் குறையாது
வலத்தினில் இருக்கும் திருப் பொலி மகட்கும்
மருப்பொடு முகுந்தன் உயர்த்திடும் மகட்கும்
இணைத்து ஒரு மனித்த உருத் தரு விழைவாளே
தலத்தினில் உறைந்து வளிச் சுதன் பதித்த
தடத்தினை உடைத்த விசும்பு அ(ன்)ன நிறத்தான் இலக்குவனொடு இணைந்த இலங்கையின் மலைக் கண் ஒளிர்வோளே
She who arises and vanishes in the earth, keeps her thoughts on her prabhu (Sri Rama) day and night, who even though posessing fiery eyes to burn Ravana, decides not to do so and instead weeps with water flooding her eyes and endures the pain so that Rama's bow Saarnga's reputation remains intact, who is of the form of Goddess Lakshmi who resides on the right side of Narayana and Bhu Devi who was rescued by Mukundha (Varaha ) with his tusks, together in their desire to take a human form, resides in this Sita Eliya temple where Vayu's son Hanuman has etched his foot prints along with the sky hued Rama and Lakshmana in dazzling brilliance!
 
May be an image of temple 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...