வெள்ளி, 24 ஜனவரி, 2025

மாதுளை (சிலேடை வெண்பா) - முருகனுக்கும் அம்பாளுக்கும்

மாதுளை  வண்ண வடிவேலா வாழ்வளிக்கு
நாதியற்று நிற்போர்க்கு நல்லருளாய்த் - தீதொழிக்கு
மாறுமாறு நான்கு மணிநிற்குங் காத்தருளச்
சீறுமாறின் சேய்நேராந் தாய்க்கு



1  

சீர் பிரித்து

மா துளை வண்ண வடிவேலா வாழ்வு அளிக்கும் நாதியற்று நிற்போர்க்கு நல் அருளாய் தீது ஒழிக்கும் ஆறும் மாறும் நான்கும் அணி நிற்கும் காத்தருளச் சீறும் ஆறின் சேய் நேராம் தாய்க்கு
 

பொருள்

மாமரமாக நின்ற சூரனைத் துளைத்த வடிவேலை உடையவனே  நாதியற்று நிற்போர்க்கு வாழ்வளிக்கும் நல்ல அருளைத் தருவாய் , அத்துடன் உனது பத்தர்களுக்குத் தீது ஒழித்துப் பாதை மாற்றி அமைக்கும் பொருட்டு  நான்கும் (வேல் மயில் சேவல் தண்டம்)  காத்து அருளும் , கங்கை மைந்தன் தன் தாயான அம்பாளுக்கு நேராம்!

2
மாதுளை வண்ண வடிவு ஏலா வாழ்வு அளிக்கும் நாதி அற்று நிற்போர்க்கு நல் அருளாய் தீது ஒழிக்கும் ஆறும் ஆறும் நான்கும்(16 ஷோடஷ மந்திரம்) அணி நிற்கும் காத்து அருள சீறும் ஆறின் சேய் (கங்கை மைந்தன்) நேராம் தாய்க்கு (அம்பாளுக்கு)


பொருள்

மாதுளைப் போன்ற செம்மை வண்ணம் கொண்ட வடிவுடைய அம்பிகையானவளே இயலாத வாழ்வையும் அளிக்கும் நாதியற்றவர்க்கு நல் அருளாய்த் திகழ்பவளே , அது மட்டும் இன்றி அவளது பத்தர்களுக்கு தனது ஷோடஷி மந்திரம் என்றும் தீதை ஒழித்து காத்தருளும். ஈற்றடி முருகனும் அம்பாளும் ஒன்று எனக் குறிக்கும் சிலேடைக்காக

 

 

Venky on X: "Pazhani aandavar bhavani varugiraai thanga there nilei  Navapashanatthil uruvamaithaare bogha perumaanei A beautiful song that  describes this exactly" / XTripura Sundari - Wikipedia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...