செவ்வாய், 21 ஜனவரி, 2025

சிவபூமி கட்டலைக் கலித்துறை

 

சிவபூமி சென்று திருக்கோயில் கண்டு தெளிந்தனமே
நவனீதக் கண்ண னதிபாலக் கந்த னயனங்குளிர்
பவரோகந் தீர்க்கும் பராசத்தி யன்னை புதல்வனுடன்
கவியாஞ்ச நேயன் கதிசீதை ராமன் கழறொழுதே
 
 
சீர் பிரித்து
சிவ பூமி சென்று திருக் கோயில் கண்டு தெளிந்தனமே
நவனீதக் கண்ணன் நதி பாலக் கந்தன் நயனம் குளிர்
பவ ரோகம் தீர்க்கும் பரா சத்தி அன்னை புதல்வனுடன்
கவி ஆஞ்சநேயன் கதி சீதைராமன் கழல் தொழுதே
பொருள்
சிவ பூமியாகிய ஈழத்துக்குச் சென்று பல திருத்தலங்களையும் கோவில்களையும் சேவிக்கப் பெற்றுச் சிவபெருமான் கண்ணபிரான் முருகன் பராசத்தி அன்னை பிள்ளையார் ஆஞ்சநேயர் கதி தரும் சீதாராமன் திருக்கழல்களைத் தொழுது தெளியப்பெற்றேம்
Fortunate enough to visit Shiva Bhumi of Eezham (Sri Lanka) and getting to see the various temples of Shiva, Krishna, Murugan, Parashakti, Ganapathy, Hanuman and Seetha Rama we achieved clarity by worshipping the divine feet of the Gods!
 
May be an image of temple 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...