ஞாயிறு, 12 அக்டோபர், 2025

திருக்கூடும் கலிப்பா

 திருக்கூடு மார்பழகா செருக்காளுஞ் சார்ங்ககரா

விருப்பாளும் வடிழகா வெறுப்போர்க்குங் காருணியா
திருப்போரூர் மருகனுக்கும் பொருப்பாளும் பாங்குரைத்த
திருக்கூடற் றிருவழகா மறைக்காதுன் னிசங்காட்டே

திரு கூடும் மார்பு அழகா செருக்கு ஆளும் சார்ங்க கரா

விருப்பு ஆளும் வடிவு அழகா வெறுப்போர்க்கும் காருணியா 

திருப்போரூர் மருகனுக்கும் பொருப்பு ஆளும் பாங்கு உரைத்த

திருக்கூடல் திரு அழகா மறைக்காது உன் நிஜம் காட்டே  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...