வியாழன், 12 பிப்ரவரி, 2026

அணிதிகழ் ஆழியும் வெண்பா

அணிதிக ழாழியு மார்ப்பரி சங்கும்

பணிதுயின் மேனியும் பற்பமலர்க் கண்ணு

மணிதிகழ் மார்பின் மலர்மகளுந் தூய  

குணந்திகழ் கோவின் குறி


அணி திகழ் ஆழியும்- அணியாகத் திகழும் சக்கரமும்; ஆர்ப்பரி சங்கும் - போர் முழக்கமிடும் பாஞ்ச சனியமும்; பணி துயில் மேனியும் -ஆதி சேடன் கண் துயிலும் மேனியும்; பற்ப மலர் கண்ணும் - தாமரைக் கண்ணும்; மணி திகழ் மார்பில் மலர் மகளும்  -  தங்கும் கௌச்துப மணி தரித்த மார்பின் மன்னு திருமகளும்  ; தூய குணம் திகழ் கோவின் குறி - கலியாண குணத்தோடு திகழ் கோவின் (நாரணனின்) குறி ; 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேனாதா மாலைமாற்று குறட்செண்டுறை

வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே  #மாலைமாற்று