வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா
வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே
#மாலைமாற்று
சீர் பிரித்து
வேல் நாதா வீடு ஆறா மாது ஈரா வாது ஆள் ஈசா வா
ஆசு ஆள் ஈது ஆ ஆராது ஈ மால் தாள் தாவு ஈதான் நாவே
வேலேந்து நாதனே ஆறு படை வீடுடையானே இரு மாதர் தலைவனே போர் என்றால் வெற்றி ஆளுமை செலுத்தும் இறைவனே வருவாயாக வந்து ஆசுகவிப் புனையும் ஆளுமை தந்து, உயிர்கட்குக் கேட்பதை விட மேலும் மேலும் கொடையளிக்கும் திருமாலின் திருவடி இருந்தாலும் அதைப் பற்றாது உழலும் உயிர்களும் உய்ய மூ உலகும் தாவி தானே வந்து அதனை அளித்தவனைப் போன்று நீயே வந்து எமக்குப் புலமை தர வேண்டும் நின்னை ஏத்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக