இயல்பிழந்தா லில்லை யெவருக்கும் வாழ்வு
கயல்பழிக்குங் கண்ணா ரெழிலீ - செயல்பல
செய்துசீர் வாழ்ந்த சமூகஞ் செயற்கையென்னும்
பொய்துதிக்கப் போய்மாண்ட வாறு
மீனைப் பழிக்கும் அழகு கண்களை உடையவளே, இயல்பிலிருந்து வழுவத் தன் வாழ்கையை இழக்கிறான் தனி மனிதன், இது எவ்வாறெனில் பல பெருமைக்குரிய செயல்களைச் செய்து கோலோச்சிய சமூகம், செயற்கை என்னும் பொய்யைக் கண்டு மயங்கி தனது மாய்வைத் தேடிக்கொண்டவாறு
iyalbizhindhAl illai yevarukkum vAzhvu
kayalpazhikkun gaNNA rezhilI seyalpala
cheidhusIr vAzhandha samUgan jeyaRkaiyennum
poythudhikkap pOymANda vARu
Oh Maiden with eyes so beautiful that defeats the fish, when men fall from their naturally ordained instincts their life is bound to fail, this can be compared to a society which had reached great zenith's by their ingenuity only to meet a very sad fall by pledging their allegience to deceitful artificiality!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக