கூடி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே
நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே
தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே
சீடை யோடு வெண்ணெய் தின்றெ முள்ள மள்ளு மாயனே
கூடி நின்று பாடல் பாடி - அடியார்கல் எல்லாம் கூடி நின்று நின் பாசுரங்களைப் பாடி
விழவு எடுக்கும் நாளிலே - விழாக் கொண்டாடும் உனது பிறந்த நாளான ஸ்ரீ ஜெயந்தியிலே
நாடி நின்ற நல்லர் உள்ளம் - உன்னையே நாடுகின்ற நல்லவர்களின் உள்ளமானது
நாதன் உன்னை எண்ணவே- இறைவனான உன்னைப் பற்றியே எண்ணி நிற்க
தேடி வந்த குட்டனாய் - எம்மைத் தேடி வரும் சிறு பிள்ளையாய்
நின் சேட்டை காண வல்லமே - நீ செய்யும் சேட்டைகளைக் கண்டுருசிக்க எமக்கு பேறுள்ளதோ?
சீடையோடு வெண்ணெய் தின்று - நாங்கள் உனக்காகப் படைத்த சீடையையும் வெண்ணெயையும் வந்து தின்று
எம் உள்ளம் அள்ளு மாயனே - எமது உள்ளத்தை அள்ளுவாயாக மாயவனே
கூடி நின்று உன்றன் அடியார்கள் எல்லாம் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடி உன்னை வழிபடுவர் இச் சிறந்த நாளான ஸ்ரீ ஜெயந்தியில், உன்னையே தியானித்து வழிபடும் நல்ல அடியார்களுக்கும் இது சிறந்த தினம், உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பர், அந்த அளவுக்குப் பக்தியில் சிறந்த நிலை எட்டாதவர்களும் (எம்மைப் போல) நீ சிறுப்பிள்ளையாக வந்து மழலை சேட்டைகள் செய்ய வேண்டும் என்று காத்திருப்போம், அப்படிப் பட்ட பேறுக்கு நாம் வல்லோம் இல்லை எனினும், உன் கருணையே இதைச் செய்விக்கின்றது, நாங்கள் படைத்த சீடையையும் வெண்ணெயையும் உண்டு எங்கள் மனத்தைக் கவர்ந்து செல்வாயாக மாயவனே, கண்ணனே!
kUdi ninRu pAdalpAdi vizhavedukku nALilE
nAdi ninRa nallaruLLa nAdha nunnai yeNNavE
thEdi vandha kutta nAy nin sEttai kANa vallamE
sIdaiyOdu veNNey thinRem uLLa maLLu mAyanE
To various level of devotees today is a very special day(Sri Jayanthi) there are devout ones who congregate together and sing the Divya Prabandha hymns and celebrate your arrival, there are others who are constantly in your thoughts and always fill their hearts with your leelas, but there are also simpletons like us who do not have a high level of Bhakthi, but yet you would grace us in your child form by displaying your playful charms , we have prepared for you the snack of seedai and butter, please come and eat it and steal our hearts oh lord of Maya, Sri Krishna!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக