ஏழைக்கு மீயு மெளிதிற் சதுரங்க
வாழிக்கண் டேற்ற மறிஞராற்- சோழற்
களவிலா தள்ளித் தருமன் பியல்பே
யொளிகதி ரோங்கு மரபு
ஏழைக்கும் அறிஞரால் சதுரங்க ஆழிகண் தேற்றம் எளிதில் ஈயும் - செல்வத்தளவில் ஏழைகளாக இருந்தாலும், கடல் போன்ற பரந்து பட்ட துரங்க அறிவை தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு எளிதாக ஈவதில்
சோழனுக்கு அளவு இல்லாது அள்ளித் தரும் அன்பு இயல்பே - சோழனுக்கு(இவ்விடத்தில் சோழமண்டலம் என்னும் நிறுவனத்தின் சதுரங்கக் கிளையைக் குறிக்கிறது) அளவற்று அள்ளித் தரும் வள்ளல் தன்மை இயல்பேயாம்! (ஏனென்றால்)
ஒளிகதிர் ஓங்கு மரபு - அவர்கள் ஒளிவீசும் ஓங்கு புகழ் கொண்ட சூரிய வம்சத்தின் வழி வந்தவர் அன்றோ!
Ezhaikkum iiyum eLidhil sadhuranga
vaazhikkaN dEtram aRinjaraaR - chOzhaR
kaLavilA dhaLLith tharuman biyalbE
oLikadhir Ongu marabu
In the act of providing expert training in the field of Chess which is akin to an ocean to commoners too easily, the Chozhas have an unlimited philanthropic attitude naturally, this is no surprise as they hail from the sunny and esteemed Surya Vamsha!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக