செவ்வாய், 16 ஜூன், 2026

குலம் அதின் உயர்வு இல்லை அறு சீர் மண்டிலம்

விளம் கருவிளம் கருவிளங்காய் 

விளம் கருவிளம் கருவிளங்காய் 

குலமதி னுயர்விலை மதியதிலை 

       கொடுமுய றவமிலை பணிவதிலை

நிலமக ளளிதரும் பொறுமையிலை 

     நினைவினி னிலைபெறு மகமதிலை

இலையென வருபவர் மனமகிழ 

    இலைமுழு வுணவது தருவதிலை
 
மலையென மறுவுளன் கதிபெறவே 

    வரையறை மறந்தரு ளறுமுகனே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவும் செயலும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

  நினைவுஞ் செயலு நினதருளே நினைவில் லுறக்க நினதருளே புனைவு நிசமு நினதருளே புகழு மிகழு நினதருளே மனையு மகவு நினதருளே மலைவில் ல...