திங்கள், 15 ஜூன், 2026

மறையும் வான்கதிரின் எழு சீர் மண்டிலம்

மா கூவிளங்காய் மா கூவிளங்காய் 

மா கூவிளங்காய் கூவிளம் 

மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின் 
       சிதறு மஞ்சணிற மல்லவே
குறையும் வானொளியி லடையும் புள்வகையி
       னரவங் கேளுசெவி கொஞ்சுமே
நிறையும் வானிருளி னுடுவும் பானிலவு மொளிர 
       நேர்த்தியுறு மோவியம்
உறையு மோரமைதி யுயிர்க ளாளுவகை 
        யுதய மாகும்வரை மிஞ்சுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...