தனத்தினோட்ட நீங்கிடாத் தகுந்தவீகை செய்யவை
சினத்தினோட்ட மேலழா துளத்தழுக்கைத் தீர்த்திடு
வனப்பினோட்ட மாய்ந்திடா தகத்தினூற்று வாகுசெய்
மனத்தினோட்ட மாயவை மகேசன்சேய் குகேசனே
தனத்தின் ஓட்டம் - செல்வத்தின் செலவு
நீங்கிடா - ஒழிந்து போகாமல்
தகுந்த ஈகை செய்ய வை- தகுந்த கொடைகளைக் கொடுக்குமாறு செய்வாயாக
சினத்தின் ஓட்டம் - கோவம் கொள்ளும் நிலை
மேல் எழாது - மேலே தலை தூக்காத வாறு
உளத்து அழுக்கை தீர்த்திடு - உள்ளத்தின் அழுக்கைத் தீர்ப்பாயாக
வனப்பின் ஓட்டம் - அழகியல் உணர்வு எழுவதை
மாய்ந்திடாது - ஒழியாத படி
அகத்தின் ஊற்று வாகு செய் - உள்ளம் ஊற்று போல் என்று புதுப்பித்துக் கொள்ளும் விதத்தை நன்றாக செய்வாயாக
மனத்தின் ஓட்டம் - மனமானது குரங்கு போல அங்கும் இங்கும் தாவும் பண்புடையது, அதனை
மாயவை - ஓரிடத்தில் அடங்க வைப்பாயாக
மகேசன் சேய் குகேசனே - மஹேசனின் மைந்தனான முருகனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக