புகழ்பா டடியார் புலமையெனக் கில்லை
யிகழ்பா டெனதிழிசொ லேற்றாய்! - நிகழ்கால
நின்னருளா லேற்ற நினைவுற்றேன் பைந்தமிழின்
மன்னருளாய் நின்ற வடிவு
புகழ் பாடு அடியார் புலமை எனக்கு இல்லை- திருப்புகழும் மற்ற துதிப்பாடல்களை நின் மேல் பாடும் அளவிற்கு புலமை எனக்கு இல்லை
எனினும்
இகழ் பாடு எனது இழி சொல் ஏற்றாய்- இகழ் போலர் தோன்றும் எனது இழி சொற்களையும் நீ ஏற்றாய் உன் அளவற்ற கருணையால்
நிகழ் காலம் - இப்போது நடக்கும் தருணத்தில்
நின் அருளால் ஏற்ற நினைவு உற்றேன்- உனது அளவற்ற கருணையின் ஊடு தக்க நினைவை நின்னைத் தொழவேண்டும் என்ற சரியான நினைவு எனக்கு அருளப் பட்டது
பைந்தமிழின் மன் அருளாய் நின்ற வடிவு - பசுமையான தமிழ் மொழியின் என்றென்றும் நிலைக்கும் அருளாய் நின்ற அழகே- முருகப் பெருமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக