வியாழன், 24 செப்டம்பர், 2026

வாணா டோறும் கலித்துறை- காலை விளித்துப் பாடியது

வாணா டோறும் பல்லிடஞ் செல்ல வகைசெய்யுந் 

தூணா நின்ற தன்னுடற் பாரச் சுமைதாங்கீ

கோணஞ் செய்து குந்துதற் கேதாங் குணக்காலே 

நாணா துன்னைப் போற்றுவ னன்றி மறவேனே  

வாழ் நாள் தோறும் பல் இடம் செல்ல வகை செய்யும் - எனது வாழ் நாள் தோறும் பல இடங்கள் செல்ல வகை வகுக்கும் 

தூணா நின்ற தன் உடல் பார சுமை தாங்கீ - துணாக நின்ற தனது உடல் பாரத்தைத் தாங்கும் சுமைதாங்கியே 

கோணம் செய்து குந்துதற்கு ஏது ஆம் குண காலே - காலை மடக்கிக் கோணம் செய்து அமருவதற்கு ஏது செய்யும் குணம் கொண்ட காலே

நாணாது உன்னை போற்றுவன் நனறி மறவேனே - உன்னை போற்றுவதற்கு நான் நாண மாட்டேன் , நினது நன்றியை நான் மறவேன் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாணா டோறும் கலித்துறை- காலை விளித்துப் பாடியது

வாணா டோறும் பல்லிடஞ் செல்ல வகைசெய்யுந்  தூணா நின்ற தன்னுடற் பாரச் சுமைதாங்கீ கோணஞ் செய்து குந்துதற் கேதாங் குணக்காலே  நாணா துன்னைப் போற்றுவ ...