சனி, 26 செப்டம்பர், 2026

அழுந்தேன் கலித்துறை

அழுந்தே னென்று சொல்வதி யார்க்கு மெளிதன்றோ

செழுந்தே னென்றுஞ் சேர்ப்பது சிற்று மெளிதன்றே
விழுந்தே னென்றாற் காதலின் வீழ்ந்து கதிகொள்ள
வெழுந்தே னன்றா யஞ்சுத னீக்கி யிதுவென்னே


(காதலில்) அழுந்தேன் என்று சொல்வது யாவர்க்கும் எளிது அன்றோ - ஆம் எளிதே;செழுமையான தேனைச் சேகரிப்பதென்பது என்று சிற்றளவும் எளிதானதல்ல அதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்;(அவ்வாறே) விழுவது என்று ஆகிவிட்டால், இவ்வுலகில் அது தவிர்க்க முடியாதது என்பதனால், காதலில் வீழ்ந்துகதி கொள்ளுமாறு; எழுச்சி அடைந்தேன் நன்றாக மனத்தில் உள்ள அச்சத்தை எல்லாம் நீக்கி, இது என்ன வியப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செய்ய நிறத்தாள் சிலேடை வெண்பா (திருமகள்+முருகன்)

செய்ய நிறத்தா டிருதருவாள் வேல்விழியா லுய்ய வழிதருவா ளோரலையின் - மெய்யெடுத்தாண் மான்மயங்கத் தந்தாண் மணமாலை மன்னுயிர்க்கு வான்வழங்க வாறா முக...