ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

செய்ய நிறத்தாள் சிலேடை வெண்பா (திருமகள்+முருகன்)

செய்ய நிறத்தா டிருதருவாள் வேல்விழியா

லுய்ய வழிதருவா ளோரலையின் - மெய்யெடுத்தாண்
மான்மயங்கத் தந்தாண் மணமாலை மன்னுயிர்க்கு
வான்வழங்க வாறா முகம்


பொருள் 1- திருமகள்

செய்ய நிறத்தாள் - சிவந்த நிறம் கொண்டவள்

திரு தருவாள் - அனைத்து செல்வங்களையும் மங்களங்களையும் தருவாள்

வேல் விழியாள் உய்ய வழி தருவாள்- வேன் போன்று அவள் விழிகளின் ஊடே உயிர்கட்கு உய்ய வழி தருவாள் (கடாட்சிப்பாள்)

ஓர் அலையில் மெய் எடுத்தாள் - ஒப்பற்ற பாற்கடலின் கண் உதித்தாள்

மால் மயங்க மணமாலை தந்தாள் - திருமால் மயங்கும் படியாக அவர்தம் கழுத்தில் மணமாலை சூடியவள்

மன் உயிர்கு வான் வழங்க ஆறு ஆம் முகம்- என்றுமே இருப்பவையான உயிர்கட்கு (ஜீவாத்மாவிற்கு) திருநாடு என்னும் வைகுந்தம் வழங்குவதற்கு பிராட்டியின் கருணை முகமே ஒரே வழி என்பது கருத்து



பொருள் 2- முருகன்

செய்ய நிற தாள் - செம்மை நிறத் திருவடியைக் கொண்ட

திரு தரு வாள் - செல்வத்தை வழங்கக் கூடிய வாளை உடைய

வேல் விழியால் உய்ய வழி தரு ஆள்- வேலின் பார்வை வைத்தே உய்ய வழி தரும் ஆளுமை உடைய

ஓர் அலையின் மெயெடுத்தாள் மான்- திருப்பாற்கடலில் உதித்த திருமகிளின் மானான வள்ளியம்மையை

மயங்க தந்து ஆள் மணமாலை - களவு மணத்தில் கொண்டு பின் திருமணம் முடித்த

மன் உயிர்கு வானம் வழங்க ஆறு ஆம் முகம்- ஜீவர்களுக்கு வானமாகிய வீடு பேற வழங்கக் குருத் தத்துவம் கொண்டு வந்த சண்முகத்தில் ஆறாம் முகம் அதோமுகத்தை ஈசனின் ஐந்து முகமும் உமையின் ஒரு முகமும் எனக் கொண்டு விளங்கும் ஆறுமுகனாம்

Uploading: 694702 of 694702 bytes uploaded.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செய்ய நிறத்தாள் சிலேடை வெண்பா (திருமகள்+முருகன்)

செய்ய நிறத்தா டிருதருவாள் வேல்விழியா லுய்ய வழிதருவா ளோரலையின் - மெய்யெடுத்தாண் மான்மயங்கத் தந்தாண் மணமாலை மன்னுயிர்க்கு வான்வழங்க வாறா முக...