விண்ணளந்த மண்ணளந்த காலிரண்டு மீட்ட
தண்ணொளிந்த மண்ணையன்று தந்தமொன்று நேர்மை
கண்ணொழிந்த வேந்தன்றலை பத்தழித்த கைநீ
கண்ணுறங்க வோய்வெடுக்கும் வாவெனது கண்ணே
விண் அளந்த மண் அளந்த கால் இரண்டு- விண்ணையும் மண்ணையும் அளந்த (திரிவிக்ரமனின்) இரு கால்களும்;தண் ஒளிந்த மண்ணை அன்று மீட்ட தந்தம் ஒன்று-நீரில் ஒளிந்து கிடந்த பூமியை அந்நாளில் மீட்ட (வராகனின்)தந்தம் ஒன்றும்;நேர்மை கண் ஒழிந்த வேந்தன் தலை பத்து அழித்த;அறவழி தவறிய இராவணனின் பத்துத் தலையை அழித்த (இராமனின்) கைகளும்;நீ கண் உறங்க ஓய்வு எடுக்கும்-நீ கண் தூங்கினால் ஓய்வு எடுக்கும் ஆதலால்;வா எனது கண்ணே-எனது கண் மணியைப் போன்ற சிறு பிள்ளையே வா வந்து உறங்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக