தேவை சிலவுள சிறுநசை சிலவுள
திருமணஞ் செயவிழை சேயிழையே
நாவி னவின்றெழு நயந்திகழ் நாமமு
நழுவிடை நாயகி ஞான்றுனதே
மேவு மிளிரொளி மின்னிகர் விழிப்பொலி
விழைகணை விடைபெற விழவுறவே
சேவை செயவிழை செல்வனின் சேய்மையைத்
தீர்த்தொழி திருவளர் தேவதையே
தேவை சில உள - தேவைகள் சில இருக்கின்றன
சிறு நசை சில உள - சிறிய ஆசைகள் சில இருக்கின்றன
திருமணம் செய விழை சே இழையே - திருமணம் செய்ய மனமிசைவாயாக அழகிய அணிகளன்கலை அணிந்தவளே
நாவில் நவின்று எழு - (எனது)மொழியின் சொற்களினால் சொல்லி எழும்
நயம் திகழ் நாமமும் - அழகு திகழும் பெயரும்
நழுவு இடை நாயகி - இடை இருக்கா இல்லையா என்று தெரியாதபடி உள்ள நழுவு இடை நாயகி
ஞான்று உனதே - எப்போதும் உனதே
மிளிரு ஒளி மேவும் - எங்கும் பரவி இருக்கும் பெருமை மிக்க ஒளி
மின் நிகர் விழி பொலி - மின்னலைப் போன்ற நினது விழியின் பொலிவு ஆகிய
விழை கணை விடைபெற - விருப்பம் என்னும் அம்பினின்று தப்பிக்க
விழவு உறவே - திருமணம் என்னும் விழா நடக்க
சேவை செய விழை செல்வனின் - சேவை செய்ய அணியாய் உள்ள இச் செல்வனின்
சேய்மையை தீர்த்தொழி - தூரத்தைத் தீர்த்து ஒழிப்பாயாக
திருவளர் தேவதை - செல்வம் என்றும் நிறைந்துள்ள தேவதையே
thEvai silavuLa chiRunasai silavuLa thirumaNanj cheya vizhai chEyizhaiyE
nAvi navinRezhu nayandhigazh nAmamu nazhuvidai nAyagi gnAnRunadhE
mEvu miLiroLi minnigar vizhippoli vidaigaNai vizhaipeRa vizhavuRavE
sEvai seya vizhai selvanin sEymaiyaith thIrthozhi thiruvaLar dEvadhaiyE
There are some needs and there are small desires, so please agree to unite your hand in marriage oh woman with beautiful ornaments! The graceful words that emanate from my mouth always are your names my Lady who has deceiving hips! Your eyes are filled with glow of lightning like splendour and they cast arrows of desire and in order to escape them agree for the auspicious ritual to happen and allow me who desires to serve you and cut short the distance between us oh divine feminine of all forms of wealth!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக