வியாழன், 23 ஜூலை, 2026

மன நிறை வனிதையின் அறு சீர் விருத்தம் (முற்றுமோனை)

 மனநிறை வனிதையின் மதுவதோ 

       மதிநிறை மகிழ்தரும் வடிவதோ 

தனநிறை தையலின் றழைவதோ 

      தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ 

நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ 

      நிகரிலி நிலவொளி நீர்மையோ 

வினையொழி வேலவன் மிகையருண் 

      மிகைமொழி விளம்பினும் விந்தையே 

மனம் நிறை வனிதையின் மது அதோ- மனத்தில் நிறைந்த அழகுப் பெண் தரும் போதையோ அது 

மதி நிறை மகிழ்தரும் வடிவு அதோ -  மதிக்கு நிறைவான மழிவு தரும் அழகோ அது 

தனம் நிறை தையலின் தழைவு அதோ - தனம் நிறை தையலான திருமகளின் தழைவு என்னும் குணமோ அது 

தனி பெரும் சார்வு இலி தமிழ் அதோ- தனிப்பெரும் மொழியான பிற மொழிகளின் சார்வு இல்லாமல் இயங்கும் தமிழ் போன்றதோ 

நினைவு ஒழி நெடு நிலை நெகிழ்வு அதோ - நினைவை ஒழித்து நெடுந்தவம் செய்யும் நிலையின் நெகிழ்வோ அது 

நிகர் இலி நிலவு ஒளி நீர்மையோ - தன்னிகர் இல்லாத நிலவின் ஓளி தரும் நீர்மையோ 

வினை ஒழி வேலன் மிகை அருள் - வினையை ஒழிக்கவல்ல வேலை ஏந்தும் முருகப் பெருமானின் மிகையான அருள் 

மிகைமொழி விளம்பினும் விந்தையே - எவ்வாறாக மிகைமொழி உரைத்து உவமையாகக் கூறினாலும் அதையும் தாண்டிய விந்தை அன்றோ அது !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன நிறை வனிதையின் அறு சீர் விருத்தம் (முற்றுமோனை)

 மனநிறை வனிதையின் மதுவதோ         மதிநிறை மகிழ்தரும் வடிவதோ  தனநிறை தையலின் றழைவதோ        தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ  நினைவொழி நெடுநிலை நெகி...