திங்கள், 9 நவம்பர், 2026

தொடக்கமிலி சந்தக் கலி விருத்தம்

 தொடக்கமிலி யீறுமிலி சோதியென நின்றாய்

மடக்குயிலின் மாண்புமிகப் பாதியுட றந்தாய்

விடக்குவளை யேற்றுயி ரிடுக்கணறு வெந்தா

யொடுக்கமுறு வாக்கடை வுயர்த்தியவுன் காலே


தொடக்கம் இலி ஈறும் இலி சோதி என நின்றாய்- ஆதி அந்தம் இல்லாத சோதி வடிவாக நின்றவனே;மட குயிலின் மாண்பு மிக பாதி உடல் தந்தாய்- உமை அம்மையின் சிறப்பு இன்னும் மிக உனது பாதி உடலை அளித்தவனே; விட குவளை ஏற்று உயிர் இடுக்கண் அறு எந்தாய்- ஆலகால விடத்தை அருந்தி உயிர்களின் துன்பத்தை அறுக்கும் என் தந்தையே/தாயே; ஒடுக்கம் உறு ஆ கு அடைவு உயர்த்திய உன் கால்- உயிர்கள் ஒடுங்கும் பொழுது அதற்கு அடைவாக விளங்குவது உனது அருள் பாலிக்கும் உயர்த்திய கால் அறுக்கும் என் தந்தையே/தாயே; ஒடுக்கம் உறு ஆ கு அடைவு உயர்த்திய உன் கால்- உயிர்கள் ஒடுங்கும் பொழுது அதற்கு அடைவாக விளங்குவது உனது அருள் பாலிக்கும் உயர்த்திய கால்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிற்பமே அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

சிற்பமே செம்பொற் சிலையே செந்தமிழ் செப்புஞ் சுவையே பொற்பதங் காண்பித் தருளே புலவர்கட் கெல்லா மரசே கற்பினால் வானோர் பிடியுங் ...