திங்கள், 10 ஜூன், 2024

கோடைமழை கலிவிருத்தம்

கோடையுமிழ் வெப்பமிகை கோலமழை சீர்செய்யுங்
கோடிபணஞ் சேர்மிகையைக் கோடலளி சீர்செய்யும்
நாடிவருந் துன்பமெலா நாதனருள் சீர்செய்யும்
பாடியவன் பாதம்பணி பாழ்வினையும் பாங்குறுமே
#கலிவிருத்தம்

வியாழன், 6 ஜூன், 2024

செவ்வாயிற் செவ்வேள்

கந்த ரலங்காரங் காக்குங் கவசங்க ளெந்தை யனுபூதி யேற்றமளி விந்தை திருப்புகழ் சீர்வகுப்பு மாறல் புயங்கம் விருத்தமந் தாதி விரும்பு

புதன், 5 ஜூன், 2024

வேலவன் வெண்பா

அரவணி நாத ரனலுதித்த மைந்தா
அரவணைவா ரன்பு மருகா - சரவணப்
பொய்கை வளர்ந்த பொருப்பாளு மாமயிலா
வைகைதமிழ் வாழ்த்துரைக்க வாழ்த்து
#வெண்பா

திருமண வெண்பா

துயரே யுருவாய்த் துளிரும் பயிரா
மயர்வே யமையு மதனா - லுயர்வே
யொருபோது மொட்டா தொழியு முணர்வாய்
திருமணந் தீவாய் நரகு

திங்கள், 3 ஜூன், 2024

தாயார் கட்டளைக் கலித்துறை

வாணேர் விழியாள் வனப்பின் மயங்கி வினைப்பயனாய்ப்
பூணார் முலையாள் பொலிவிற் றிளைத்துப் புலமைமிகு
மாணா மதுர மொழியா ளவடன் மகத்துரைக்க
வாணா ளடையு மலர்த்தாள் பணிவா மறைப்பயனே

#கட்டளைக்கலித்துறை

வேலவன் கலி விருத்தம்

வேடவேடம் பூணிவந்து வேழவேழத் துணையுட
னோடியாடிக் கானமேவு வேடமாதைச் சேரவே
நாடினாடிக் காதலித்த நாலுவேத நாயகா
வீடுதேடி வாடுமாவின் வேதனைதீர் வேலவா

இளையராஜா விருத்தம் வெண்பா

இசைதரு மிசைத்தரு வெண்பத்தொன் றெட்ட
விசைதரு மிசைக்கொரு வின்பத்தமிழ் சொட்ட
வசைவுறு நசைக்கொரு வன்புக்கவி யிட்ட
நிசைவரு மிசைக்குரு சந்தத்தமிழ் மெட்டே

கலிவிருத்தம் 

இசை தரும் இசை த்தரு என்பத்து ஒன்று எட்டி 

 விசை தரும் இசைக்கு ஒரு இன்பத்தமிழ் சொட்ட 

அசைவுறு நசைக்கு ஒரு அன்புக் கவி இட்ட 


நிசை வரும் இசைக்கு உரு சந்தத் தமிழ் மெட்டே

இளையர்க ணெஞ்சி னிசைத்தேவன் காதல்
விளைவிக்கு மாக்கு மிறைவன் - களைவானே
துன்பத் துயர்தீர தூய னழித்தலு
மன்பா யருளுமிரா சா

வெண்பா 

 இளையர்கள் நெஞ்சின் இசைத் தேவன் காதல்
விளைவிக்கும் ஆக்கும் இறைவன் களைவானே
துன்பத் துயர்தீர தூயன் அழித்தலும்
அன்பாய் அருளும் இராசா

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...