தாபந்தீர்க்கு மெண்ணெய்தேய்த்துக் காயமிட்டு நலங்கினைப்
பாபந்தீர்க்குங் கங்கைநீரி னாடிநாள் புலர்ந்தெழத்தீபேமேற்றி வெடிவெடித்துப் புதியவாடை போர்த்துநங்
கோபமற்ற பூமியன்னை கொன்றநாண் மலர்கவே
தாபம் தீர்க்கும் எண்ணெய் தேய்த்து - உடம்பின் சூட்டை நீக்கும் எண்ணெய் தேய்த்து;நலங்கினை காயம் இட்டு- உடலில் நலங்கிட்டு;பாபம் தீர்க்கும் கங்கை நீரின் ஆடி நாள் புலர்ந்து எழ- பாவங்களைத் தீர்க்க வல்ல கங்கை நீரில் குளித்து நாள் பொழுது புலர;தீபம் ஏற்றி வெடி வெடித்து புதிய ஆடை போர்த்தும்- தீபங்களை ஏற்றி வெடிகள் வெடித்து புத்தாடை உடுத்தும்; கோபம் அற்ற நம் பூமி அன்னை கொன்ற நாள் மலர்க- பொறுமையின் சிகரமான கோபம் சற்றும் அற்ற நமது தாயான பூமி, நரகாசுரனைக் கொன்ற (சத்தியபாமையாக) நாளான தீபாவளித் திருநாள் மலரட்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக