திங்கள், 22 மே, 2023

கட்டளைக் கலித்துறை

1.

ஊற்றெடுக் கும்கவி யுந்தேற் றுரைக்கு மொழியுமுனைப் போற்றிசைக் கும்பா வுமுறை பொருளின் புகழுருவாய் நேற்றிருக் குஞ்சிந்தை நீக்கி ஒளிதரு நேயனுமாய் வீற்றிருக் குங்கோவில் மேன்மை யுணர்த்தி விளக்கினையே

படம் 

2.

மாதவா வென்றுமே மாதவர்க் கேற்பன் றுறுதியுடன் மாதவா வென்றுமே லோர்சொற் றகவிர வையகத்தில் மாதவா வென்றுமே கப்பெயர் பெற்று மனங்குளிர மாதவா வென்றுமே வந்துறை இச்சக வாழ்வினிலே

படம்  

3.

ஐயாறெட் டோது மறிவில்லை யென்று மகமுருகி மெய்யாறுன் நாமம் விளிக்க வுமிலை வினையறுக்கும் பொய்யா மொழிப்பு லவருரை சற்றும் பொருந்தவில்லை உய்யுமா றீனற் குரைப்பா யுழலு முலகினிலே 

4.

முருகா குமரா முழுமுதற் கேள்வா முராரிதிரு மருகா பொருதாயே முந்நீர் வறள முரசதிர சருகாய்ச் சிதைத்தா யசுரர் படைகள் தடம்புரள ஒருகா லுனைநான் மறந்தா லுமாற்றெனை உள்ளமர்ந்தே

படம்  

 

5.

மாலுற்ற மைந்தன் மனத்தினை மாற்றவல் லானினைவிற் காலற்ற கைவல்யம் கண்டு களித்த சுகமுனித்தாட் பாலற்று வைகலும் பண்பாய்ப் பணியப் பலகவியும் வேலொத்த கண்ணி மணவாளன் நல்குவான் மீச்சிறப்பே 

படம்  

 

6.

நாடும் பொருளையே நாடி விழுந்தாலும் ஞானமிலாச் சூடு படினும் சுவையில் மயங்கி துதிக்கவல்ல பீடு பொருளைப் பிரானை நினைந்து ருகாதவெனை வீடுறச் செய்யநீ மேற்கொளும் பாடென்னே வேலவனே

படம்  

 

7.

மாலை வணங்க யவர்பா லுழன்று மதிகெடுக்கு மாலை வணங்க வழிவென் றுணர்ந்து மனமகிழ்ப்பா மாலை வணங்க மழவான்றோர் போற்று மலைவாடிரு மாலை வணங்க மனமும் உடலும் வளம்பெறுமே -கட்டளைக் கலித்துறை ஆலை - கள் அலை -கடல் வணம் - சந்தம்
 
படம் 
 
8.
அறுபத மென்றே யருணையி லன்ற ருணைமுனிவற்
கறுபத வேலன் அளித்த அருமறை மந்திரத்தை
அறுபத கத்தார் அகஞ்சூழ்ந் தழுமுன் அறிந்தெழுவாய்
அறுபத மொய்க்க வடங்கு முடலீற் றிலென்றுணர்ந்தே

அறு பதம் என்றே அருணையில் அன்று அருணை முனிவன் (கு )
அறுபத வேலன் அளித்த அருமறை மந்திரத்தை
அறுபது அகத்தார் அகம் சூழ்ந்து அழும் முன் அறிந்து எழுவாய்
அறுபதம் மொய்க்க அடங்கும் உடல் ஈற்றில் என்று உணர்ந்தே

அறுபதம் - ஈ
அறுபத - ஷடாக்ஷரம்
அறு பதம் - சொல்லற சும்மா இரு என்ற உபதேசம்
அகத்தார் - சுற்றத்தார்
அகம் - வீடு
அருணைமுனிவர் - அருணகிரிநாதர்
அருணை- திருவண்ணாமலை 
படம் படம் 
 
9.
தேசுடை வேடச் சிறுமி தலைவன்றன், செந்தமிழால் ஏசுவோ ரும்வாழ்ந் துயர அருள்தரும் ஈடிலாம கேசற் குருப்புகழ் கேட்டு ருகும்பேறு கிட்டுமோயிங் காசு கவிக்கோ ரரசே அருணை யருமுனியே
படம்  
 
10.
காத லெனவுங் கனவுக ளென்றுங் குவலயத்தின் மோத லெனவு மொருமை எனவு முழலுமுளஞ் சாத லெனவுஞ் சனன மெனவுந் தளையகலா தாத லினாலயிற் கொண்ட ருடருவா யன்புருவே
படம்  
 
11.
தாமரைப் போதமர்த் தாதை யறியாத் துதிப்பொருளைத் தாமுறை யோதவே தாதையுங் கேட்ட தகப்பகுரு யாமுரை வேதமா யாண்டும் மகிழ்வா யிசைப்பதுவே தாமுறை யூதிடுந் தாரையை வேண்டிலோஞ் சாடிலோமே
 
படம்  
 
12.
ஏக நடன மியைந்து களித்திட வீசனது மோக மடைந்த முராரி அணையு முடிவெடுத்து தேக உடலைத் தரித்த வதரித்தான் றில்லையிலே யோகச் சிறப்பு முருப்பெற் றெழவே உலகினிலே 
படம் 
ஏக நடனம் இயைந்து களித்திட ஈசனது
மோகம் அடைந்த முராரி அணையும் முடிவெடுத்து
தேக உடலைத் தரித்து அவதரித்தான் தில்லையிலே
யோகச் சிறப்பும் உருப் பெற்று எழவே உலகினிலே

ஈசனது ஈடிலா நடனம் தில்லையில் காண்பதற்காக ஆசை கொண்ட ஆதி சேஷன் ( முராரி அணை ) மனித உடலை எடுத்து தில்லையில் அவதரித்தான் [பதஞ்சலியாக , இதனால் யோகச் சிறப்பும் உருப்பெற்று எழுந்தது உலகினினிலே  
 
 
13.
தோத்திரஞ் செய்து துதித்தேத்த வல்ல துடியிடையாள் நேத்திர மூன்றுடை நீல மிடற்ற னிதமுறையுஞ் சேத்திரம் யாவுஞ் சிறப்பாய் விளங்குஞ் செகத்தனையாள் மாத்திரைப் போது மனதுனை யுள்ளும் வகையருளே
 
படம்  
14.
படம் 
 
புகழிற் கடிதந்த புண்ணியன் பேர்தாங்கிப் பூவுதித்து புகழிற் கடிதா புலவா எனவுன் புகழ்பரவப் புகழிற் கடிதப் புகழிற் புதையாப் புலமைபெற்று புகழிற் கடிதம் புவிய றியநீ புனைந்தனையே
 
புகழிற்கு அடி தந்த புண்ணியன் பேர் தாங்கிப் பூ உதித்து
புகழிற்கு அடி தா புலவா என உன் புகழ் பரவப்
புகழில் கடிது அப்புகழில் புதையாப் புலமை பெற்று
புகழில் கடிதம் புவி அறிய நீ புனைந்தனையே

திருப்புகழிற்கு அடி தந்த முருகப் பெருமானின் பெயரைத் தாங்கி பூமியில் உதித்தாய் (முத்தையா)
திரையிசைக்கு தமது புகழ் தேடிக்கொள்ள உன்னை பாடல் எழுதப் பலர் உன்னை அணுகினர் உனது புகழ் பரவ
இவ்வாறு ஒருவருக்கு புகழ் சேருமானால் அதில் கடினமான விஷயம் என்னவென்றால் அதில் மூழ்கி விடுவார், அவ்வாறு புகழில் நீ புதையாமல் உனது புலமையை நிலைபெறச் செய்தாய் , அதன்பிறகு உனக்கு அழிவில்லை என்ற கவியும் நீயே எழுதினாய் உன்னைப் பற்றி , இஃது நீ ஒரு மாபெரும் கலைஞன் என்று புவி உணரும் படியாக இன்னும் சிறப்புற அமைந்தது 
15.
வீண ருரைக்கும் வெறுஞ்சொ னினைந்து வினைபுரியா நாணத் தகுமொரு நாத்திக வாழ்வி னடம்புரியாக் காணக் கிடைத்த கடம்ப னழகைக் கவின்மொழியாற் பாண ரனைய பலவகைப் பாவமைப் பண்ணிசைத்தே
 
வீணர் உரைக்கும் வெறும் சொல் நினைந்து வினைபுரியா நாணத் தகும் ஒரு நாத்திக வாழ்வில் நடம் புரியாக் காணக் கிடைத்த கடம்பன் அழகைக் கவின் மொழியால் பாணர் அனைய பல வகைப் பா அமைப் பண் இசைத்தே
படம்
 
படம் 
 
16.
கோதிற் கிழவ குமரப் பருவ குணமொழுகி கோதிற் கிழவ குமர னறியா குழம்பிநிற்க கோதிற் கிழவா குமரா வெழுப்ப குவலயமே கோதிற் கிழவா குமரா வெனவே குதித்தெழுமே
 
கோதில் கிழவ குமரப் பருவ குணம் ஒழுகி கோதில் கிழவ குமரன் அறியா குழ்ம்பி நிற்க கோதிற்கு இழவு ஆகும் அரா எழுப்ப குவலயமே கோதில் கிழவா குமரா எனவே குதித்து எழுமே
 
கோது - சக்கை, குற்றம் இல் - இன்மை , இல்லம் அரா-குண்டலினி
 
கோது ( சக்கை இங்கு உடலுக்கு உவமை) கோதில் -சக்கை யின் இருப்பிடிமான இவ்வுடல் , அது இளமை , முதுமை எனும் இயல்பில் அதன் போக்கில் அதற்கு உரித்த குணங்களில் உழல்கிறது, அவ்வுடலின் உரிமையாளனான உயிர் ( கோதில் கிழவ ) குமரன் எனும் கடவுளை உணராமல் குழம்பி நிற்கிறது.
 
கோது ( சக்கை இங்கு உடலுக்கு உவமை) கோதில் -சக்கை யின் இருப்பிடிமான இவ்வுடல் , அது இளமை , முதுமை எனும் இயல்பில் அதன் போக்கில் அதற்கு உரித்த குணங்களில் உழல்கிறது, அவ்வுடலின் உரிமையாளனான உயிர் ( கோதில் கிழவ ) குமரன் எனும் கடவுளை உணராமல் குழம்பி நிற்கிறது.
 
அச்சக்கையான உடலுக்கு மரணம் (இழவு) போல திகழும் அரவு ( குண்டலினி) எழும்ப , புத்துயிர்ப் பெற்று ஞானம் பிறக்கும் , பின்பு இவ்வுலகமே குற்றமற்றக் கடவுளின் ( கோதில் கிழவா குமரா) உருவமாய்த் தெரியும்
 
படம்   
 
17.
வேலனே வேதமாய் ஞாலமும் போற்றிடும் மேன்மையுரை காலனை வீழ்த்திடும் கந்தனைக் காட்டும் கவிமணியைப் பாலமாய்க் கட்டியே பாதையைச் செய்தநற் பாரதனிற் சீலனைப் போற்றியே சேயுரு செப்பு திருப்புகழே 
 
படம் 
18.
அருணைக்கு மேலு மழகூட்டும் வண்ண மவதரித்த கருணைக் கடலைக் கவிக்கொரு வித்தைக் கலைமணியை வருணிக்கச் சொல்லு முளதோ எனினு மனமகிழ்ந்தித் தருணத்திற் செந்தமிழ்ச் சொன்மாலை சாத்துவோ நாதருக்கே
 
படம்  
 
19.
நினைத்தாலே முத்தி தருமூ ருதித்தோன் றிருப்புகழை நினைத்தாலே முத்தி நினைவி னிறுத்தி குருப்புகழை நினைத்தாலே முத்தி நிசமறிந் தோத நிலையுயர்ந்து நினைத்தாலே முத்தி தருநாத னாசி நிலைபெறுமே 
 
A R U N A C H A L A S A M U D R A - Devotees - Ancient - Arunagirinathar  
20.
யானென் றழிந்துய் யவுனதாட் பற்றி யினம்புரியா தேனென் றருந்தி திளைத்த சுரரேவு தென்னிலங்கை மானன் றடைய வனம்விரைந் தோடி மனைதொலைத்த கோனென் றுமெச்சுங் குமரா குறைவிற் குருகுகனே 
படம் 
 
21.
எண்ணற் றுயிர்கட் குளத்துறை நாதா உலகளந்து மண்ணற்று நின்றகோ மாவலி ஆட்கொண்டு மண்கலசம் கண்ணுற் றுடைத்துக் களவாடி வெண்ணெய் கதியறியா புண்ணுற் றுனது புகழ்பாடும் அன்பர் புகலிடமே
படம்  
 
22.
கீதையி னாயகன் கேட்டுத் தெளிய, கறையறியாச் சீதையி னாயகன் சான்றாய் விளங்க, தினந்தொழவே கோதையி னாயகன் கூடத் தரசனெங் கோதகற்றிப் பாதையைப் பாரிற் பரிசுத்த மாக்க, பதைப்பிலையே படம் 
 
23.
 
சரண முனதடிக் கீழென்றும் மாய தரணிதனில் மரண மெனைய ணுகுநே ரமதில் மயில்மிசைவந் தரணு மெனக்க ருளியு னதுல கழைத்தெனையும் தருண மதிற்கதி தாவம ராபுரி வாழரச
 
படம் 
 
24.
 
வாடாத் தமிழ்மாலை வையஞ் சுவைக்க வடித்தவளை கூடாரை வெல்லும்சீர் கோவிந் தனுவக்க கோதைதனைச் சூடிக் கொடுத்த சுடர்கொடி யைநாம் துதிப்போம்திரு வாடிப்பூ ரந்தனில் ஆள உதித்த பிராட்டியையே
 
படம்   
25.
தளைபட் டழிய தனியே தவிக்குந் தரணிதனில் விளைபற் றறுத்து வினைகள் புரியும் வினயமளி ஒளியிட் டொழிப்பா யுளத்த(ல்)லை யென்றுங் குகனினைவை முளைவிட் டெழச்செய் முகமா றுடைய முழுமுதலே
படம் 
 
26.
மாலை யகற்றி மனத்தூய்மை பெற்றிட வையமதின் மாலை யகற்றி னமேற்றி வழிபடு மாண்பருட்கா மாலை யகற்றி வடிவனை யென்றும் வணங்குருகு மாலை யகற்றி யமனு மியலா வணமருளே
 
மாலை அகற்றி மனத்தூய்மை பெற்றிட வையமதில் மாலை அகல் தினம் ஏற்றி வழிபடும் மாண்பு அருள் காமாலை அகற்றி வடிவனை என்றும் வணங்கு உருகும் மாலை அகற்று இயமனும் இயலா வ(ண்)ணம் அருளே
 
வையமதில் உள்ள மாலை ( மயக்கத்தை) அகற்றி மனத்தூய்மை பெற்றிட , மாலை அகல் தினம் ஏற்றி வழிபடும் மாண்பருள், காமாலை அகற்றி வடிவனை என்றும் வணங்கு உருகும் மாலை ( அன்பை) அகற்ற இயமனும் இயலா ( இறப்பு கூட அந்த அன்பை விலக்கிடா) வண்ணம் எமக்கு அருள்வாயாக
 
படம்    
 
27.
ஆடி அடங்கும் அவனி அவதரித் தார்ப்பரிக்கும் தேடித் திரிந்தும் தளையறா வாழ்வில் திசையறியா வாடி வதங்கும் உயிர்கள் உயர மனமுருகி ஆடி அதனில் அனையைத் தொழுதிடும் வெள்ளியிலே
படம்  
 
28.
அடைந்த துனத ருளாலே அனைத்தும் அகமகிழ உடைந்த தெனது ழலும்பி றவிபல உன்னடியார் நடந்த வழிய தனைத்தொ டரநாளும் ஞாலமதைக் கடந்த சுடரே கருத்தே உறைகந்த கோட்டகோவே
 
படம்  
29.
முத்தா யடியெடுத் தூட்டி யமுத ருணகிரிக்குப் பித்துந் தெளிய பிரானைத் துதிக்கும் பிறங்குமதி வித்தென உள்ளே இருந்தீ தனைவீடோ ராறுடைய எத்தனை சென்மம் எடுப்பின் உடன்வா இறைவநீயே
படம்  
30.
முக்கா லறிந்த முழுமுதற் கோவை யுளமுருகி இக்கோலங் காண இளமதி யைப்பூணும் ஈசனடி எக்காலு மாடும் விடைபாகன் லீலை விரும்பிபெற நெக்காடு நாகம் நகைபூணு நாதா நிதமருளே
படம்  
 
31.
மையங்கண் மாதர்தம் மார்பினிற் சேர விழைபவனின் வையொளிச் செங்கதிர் வண்ண முகமா றழகுடைய கையயிற் றன்னெழிற் கண்கவர்க் கோலமாய்க் காட்சிதரும் தையலா ரீருடை தன்றமி ழேற்குந் தனிப்பொருளே
படம்படம்  
 
32.
சங்கத் தமிழ்மூன் றளித்தான் வினாயக னௌவைக்கன்று மங்கை ஒருபங்கன் மூலன் தமிழ்செ யளியளித்தான் பங்கயக் கண்ணனோ பாத்தமிழ்க் கேட்டுடன் பின்தொடர்வான் செங்கையில் வேலன் சிரித்தேற்பான் வைதார் தமிழ்பிடித்தே
 
படம் 
 
33.
அடைந்த துனத ருளாலே அனைத்தும் அகமகிழ உடைந்த தெனது ழலும்பி றவிபல உன்னடியார் நடந்த வழிய தனைத்தொ டரநாளும் ஞாலமதைக் கடந்த சுடரே கருத்தே உறைகந்த கோட்டகோவே
 
34.
பித்தன் பிறப்பித்த பேற றுமுகப் பிரானுனையே சத்தி சிறப்பித்தாள் சண்முக மொன்றாய்த் தகைமைபெற குத்தி அவுணர் குலகுன் றழித்தாய் கணத்தினிலே அத்திக் கிறைவா வணங்குவோ மாடி கிருத்திகையே
    
35.
பித்த னெனவும் பிரானைத் தொழலாம் பிரியமுடன்
அத்த னெனவு மடிமை செயலா மகமழிந்தே
சித்த னெனவுஞ் சிவனைத் தொழலாம் சிரம்பணிந்தே
பத்த னுளம்பண் படைய விசைப்பான் படைத்தவனே 
 
 
36.
காரோட்ட வாழ்வில் கலங்கா துனது கழல்பெறவே சீராட்டு மன்னை திருவாய் முகிழ்ந்து திகைக்கவைத்த பாராட்டு மேசு பகைச்சொல்லு வேறிலாப் பார்த்தனுக்குத் தேரோட்டு மீசை தயிர்வண்ண கோவெமைத் தேர்ந்தருளே
படம்  
 

புதன், 17 மே, 2023

எண்ணலங்காரம்

 படம்

வேலொன்று மாதிரண்டு முக்கா லுமுணர்ந்த நாலென்று மையா றெழுவனை யெட்டா நவநா ளுதித்த தசானனக் கால னுவந்த மருகனை யுள்ளு -வெண்பா

வேல் ஒன்று மாது இரண்டு முக்காலும் உணர்ந்த நாலு என்றும் ஐயாறு எழுவனை எட்டா நவநாள் உதித்த தசானனக் காலன் உவந்த மருகனை உள்ளு முக்கால்- மூன்று காலம் நாலு -வேதம் ஐயாறு- கங்கை 

ஐயாறு எழுவனை - முப்பது அடிப்படை எழுத்தாக கொண்ட செந்தமிழின் எழுவாயாக விளங்குபவனை ( முருகனை) என்றும் வேறுபட்டும் பொருள் கொள்ளலாம்  

 நவ நாள் -நவமி , உலகிற்கு புதிய விடியல் தசானனன்- இராவணன் 

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

ககர வருக்கப் பாடல்

 

ககக்கோக் குகக்கோ ககாக்கக் ககுக்குகை கூக்குகக்க
ககக்கோக் ககக்குகு கைக்கைகை காக ககாகுகக்கோ
ககைக்கோ குகைக்கோ ககக்கோகிக் கூக்கை ககக்குக்குகா
ககக்கைக் ககைக்கோக்கு கூகாக்கக் கேகிக்கோக் கூக்கிகைக்கே
-கட்டளைக் கலித்துறை
ககக்கோக்கு ( பறவைகளின் அரசனான கருடன்) உகக்கோ (உகந்த தலைவனான திருமால்) க ( அரசனை- கஜேந்திரனை ) காக்க ககுக்கு (தீமை செய்பவர்களுக்கு - முதலைக்கு) உகை ( அழித்த ) கூக்கு (பூமிப்பிராட்டிக்கு உகந்த) க - தலைவன்
ககக்கோக்கு ( ஆகாய அரசன் - இந்திரன்) அகக் குகு (அமாவாசை - இருள்) கைக்கு (சேனைக்கு) ஐ (தலைவனான ) உடனே (கை) கா ( சோலை ) க ( செல்வனான ) க ( சந்திரன் போல) கா ( காக்கும் - இருளகற்றும்) குகக்கோ ( குகப்பெருமானே)
க ( திருமாலின்) கை ( தங்கையான உமாதேவியின் ) கோ ( அரசனான சிவன்) குகைக்கோ ( அமர்நாத் குகையின் கடவுளே) க ( ஆன்மாக்களின் ) க ( அரசனான) கோகி ( தும்பை அணியும்) கூக்கு ( பூமிக்கு ) ஐ ( தலைவா) க ( திருமாலுக்கும் ) க ( பிரமனுக்கும் ) குகா ( மறைவானவனே - அடி முடியை அறிய முடியாத படி)
க ( விநாயக) க ( அரசின்) கைக்கு ( துதிக்கைக்கு) அகைக்கோக்கு ( மலர்களாலான கோவை அளிப்போம் ) கூ ( புவியை) காக்க ( காக்கவும்) கேகி ( மயில் ) கோக்கு ( மயிலின் கோனான முருகனுக்கு) ஊக்கு இகை ( ஈகை ) செய்ததற்கே (வள்ளி திருமணத்தில்)
ககம் - ஆகாயம், பறவை
க - அரசன், தலைவன், திருமால் , பிரமன் , சந்திரன் , விநாயகன்
குகு -அமாவாசை
ககு -தீமை செய்பவன்
கை - சேனை, துதிக்கை ,உடனே , தங்கை
உகை -அழித்தல்
குகா - மறைவானவன்
குக - முருகன்
கூ- புவி
கேகி - மயில்
கோகி -தும்பை
கா - காத்தல் , சோலை
ஐ -தலைவன்
அகை - மலர்
க வருக்கம் மட்டும் பயன்படுத்திய செய்யுள் முயல்வு

தகர வருக்கப் பாடல்

 May be an image of 2 people and people standing

தாதுதைத்த தீதுதித்து தத்தொத் ததிதாதா
தீதுதித் தீதை திதிதுதை - தேதுதி
தீதுத்து தித்தத் திதத்தாதை தாதத்தித்
தேதுதித்து தித்த திதி
-வெண்பா
தாது தைத்த தீது உதித்து , தத்து ஒத்து அதிதாதா
தீது உதித்து ஈதை திதி துதை தே துதி
தீது உத்து உதித்தத் திதத் தாதை தாது அத்தித்
தே துதித்து உதித்த திதி
தாதுக்களால் (பஞ்ச பூதம்) தைத்த தீது ( உடல்) உதித்து (அதனது) தத்து (கிரகவொழுங்கு) ஒத்து அதிதாதா ( பெரிய வள்ளலுக்கு ஒப்பாக இருந்தாலும்) தீது ( சாவு) உதித்து ஈதை (துன்பம்) திதி (தேதி) துதை (நெருங்கி வரும் வேளை வரும் ) அதனால் கடவுளைத் தொழு (தேதுதி)
ஏனென்றால் நம்மை படைத்த பிரமனே தீது உத்து -குற்றம் நீங்கி ( பிரணவம் தெரியாது இருந்த போது மற்றும் குமரக் கடவுளை ஆணவத்தோடு நோக்கிய போது ) உதித்த ( தோன்றிய ) திதத் தாதை ( உறுதி நிலைபெற்றான் பிரமன் ) (அது எப்போதென்றால் ) அவன் தாது அத்தி ( தேனைப் போன்ற தேவானையின்) தே ( கடவுளை ) அதாவது முருகனைத் துதித்து உதித்த ( புத்துயிர் பெற்ற ) திதி ( சமயம்)
தாது - பஞ்ச பூதம் , எலும்பு சதை போல பொருட்களுள்ள, தேன்
தீது - உடல் , சாவு , குற்றம்
தத்து - கிரகவொழுங்கு
ஒத்து- ஒப்பான
அதிதாதா - மிகப்பெரிய வள்ளல்
ஈதை - துன்பம்
திதி - தேதி, சமயம்
துதைதல் - நெருங்குதல்
உத்து - நீங்கி
தித - உறுதியான
தாதை- பிரமன்
அத்தி - தேவயானை
தகர வருக்க எழுத்துகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன

வியாழன், 6 ஏப்ரல், 2023

எண்ணலங்காரம் (பங்குனி உத்திரம்)

May be an image of 1 person

 

எண்ணலங்காரம் (இராம நவமி)

 No photo description available.

ஓரில் லாளன் ஒற்றைச் சொல்லான் ஒன்றே பாணம் என்றே இருந்தான்
ஈரா சான்கள் வித்தை கொடுத்தர் இளையோர் இவற்கு மூன்றும் ஆமே
நாரா யணனின் அம்சம் அதனால் நான்கு வேதம் போற்றும் பொருளாம்
போரில் செற்றான் ஐயீர் சிரத்தோன் பாரில் அமைதி நிலவச் செய்தான்
ஆற்றை கடக்க ஆறமைத் தானை ஆரத் தழுவி ஐவ ரென்றான்
பேற்றை அருளும் புருடோத் தமனைப் போற்றிப் பணியும் ஏழே ழுலகும்
ஏற்றம் தந்தான் காற்றின் புதல்வற்(கு) எட்டுத் திக்கும் புகழும் பரவ
வீற்றான் உலகில் நவமித் திதியில் மேன்மை தந்தான் பத்தி ரதற்கு
எண் வரிசையாக அமைந்த இரண்டு எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.இராம நவமியன்று தோன்றிய எண்ணலங்காரப் பாடல் , ஒன்றிலிருந்து பத்து வரை இவ்விருத்தங்களில் பயிலப் பட்டுள்ளன
ஈராசான்கள் - வசிஷ்டர் , விசுவாமித்திரர்
ஆற்றைக் கடக்க ஆறமைத்தான் - குகன்
காற்றின் புதல்வன்- ஆஞ்சநேயன்
ஐயீர் சிரத்தோன் - இராவணன்
பத்து இரதன் - தசரதன்
ஏழேழுலகு - எண்ணிலடங்கா உலகங்கள்

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...