புதன், 13 செப்டம்பர், 2023

சந்த விருத்தம்

Murugan and His Two Wives - Valli and Devasena or Devayani 

வஞ்சிக் கொடியி னெஞ்சத் துறையும்
வந்தித் தருளு நந்திக் குமரன்  
மன்றத் தமருங் குன்றத் தலைவன்
மன்னித் தருளும் கன்னித் தமிழன்                          புகழ்பாட

செஞ்சொற் றரவே சிந்தை புகவே
தெள்ளத் தெளிவாய் வள்ளி மலைவாழ்
உள்ளத் துறையும் வெள்ளத் தமிழால்
செல்லத் துறவி மெல்லப் புனைந்த                          கவிபாடி

வஞ்சத் துறையும் நெஞ்சைத் துலக்கி
வண்ணக் கவியின் பண்ணைச் செபிக்க
அன்னைத் தமிழின் கன்னற் சுவையை
அங்கத் துறைய அள்ளிப் பருக                               அருளாயே

கஞ்சத் தமரும் வஞ்சித் தழுவும்
நெஞ்சத் துடைய நந்தன் மகனின்
கொஞ்சித் திரியும் அங்கண் மகளின்
நெஞ்சத் தணையும் சென்னிக் கிரிவாழ்             பெருமாளே

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருச்சீரலைவாய்

 மாரனை நாடாது வாலிபம் வேறேது 

மாதுளம் காணாது மானுட வாழ்வேது                             அதுபோலே
 

சூரனை போரூடு சூடிய வேலோனை 

தூமலர் தாளோனை தாரணி மார்போனை                  மனதாலே
 

காருமை பாலோனை கார்த்திகை மேலோனை 

காதலில் சேராமல் கானகம் போவேனோ                        ஒருநாளே
பாரலை ஓயாத பாதகம் நேராத 

சீரலை வாயாளும் வானவர் கோமானின்                     மருகோனே

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

கட்டளைக்கலித்துறை

1.

 முப்புரி மாற்று முழுமதி நாளில் மனமுருகி முப்புரஞ் செற்ற முழுமுதற் கேள்வன் உளநிறுத்தி அப்பணி நாத னழகுக் குமர னடிதொழுதே ஒப்பிலி பத்தி யுருகொளச் செய்வா யுளத்தினிலே

 

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அருணகிரிநாதர் புகழ் போற்றி

  படம்

ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ

 

பத்திராசலம் இராமர் விருத்தம்

May be an image of text

 

ஏது மற்றவர் ஏழை எளியவர்

ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக

ஈரி லற்றவர் ஏக சொற்றவர்

வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா


மாதை யற்றதோ ரூறை யற்றுற

ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ

வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி

ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே

சனி, 22 ஜூலை, 2023

திருப்போரூர் கந்த சுவாமி

ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு

Murugan Temple Tirupporur, India | Best Time To Visit Murugan Temple 

திருவாடிப் பூரம்

படம்  

வாரண மாயிரம் வடிவா யமைத்து நாரண னம்பியி னற்கரம் பிடித்து ஆரண மனைத்து மடங்கு விதமாய் ஏரணந் தவறா இறைவி பகர்ந்தாள் -கலி விருத்தம்

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...