காமநன்று சித்தியாக நோன்புநோற்கு நாளிது
சேமநன்று சித்தியாகு முறையறிந்து செய்திடின்
காமனன்று ஸ்ருஷ்டிசெய்த வாமரூப கண்ணனைக்
காமமென்று தேர்வுசெய்து கதியடைந்து கொண்மினே
காமநன்று சித்தியாக நோன்புநோற்கு நாளிது
சேமநன்று சித்தியாகு முறையறிந்து செய்திடின்
காமனன்று ஸ்ருஷ்டிசெய்த வாமரூப கண்ணனைக்
காமமென்று தேர்வுசெய்து கதியடைந்து கொண்மினே
மன்றி னடித்தாய் மலைமகளைக் காலோங்கி வென்றாய் மிளிர்வெள் விடைபாகா - தொன்று கடல்வந்த நஞ்சுண்டாய்க் கண்டங் கறுத்தா யுடல்வந் தொளிதா வுயிர்க்கு
பூதப் பொருபடைச் செயல்வீரா
பூவை வலம்வரு மயினாதா
வாதத் தயில்விடு முமைபாலா
வாஞ்சைக் குருதரும் வ(ள்)ளிநாதா
சோதித் தருடருஞ் சுடர்வேலா
சோழத் துரைதருந் தமிழ்நேயா
கீதத் துதிசெய வுனைநாளுங்
கீழ்வற் களிதருங் குகனேசா
கம்பற் கிளையாளைக் கம்பற் கினியாளைக்
கம்பத் திளையாற்குக் கைவேலை யீந்தாளை
யும்பர்க்கு மேலான யூழிக்கு மூலாளைக்
கும்பிட் டுயர்வாரைக் கும்பிட்டே யுய்வோமே
மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...