ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ
ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ
ஏது மற்றவர் ஏழை எளியவர்
ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக
ஈரி லற்றவர் ஏக சொற்றவர்
வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா
மாதை யற்றதோ ரூறை யற்றுற
ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ
வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி
ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே
ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு
வாரண மாயிரம் வடிவா யமைத்து நாரண னம்பியி னற்கரம் பிடித்து ஆரண மனைத்து மடங்கு விதமாய் ஏரணந் தவறா இறைவி பகர்ந்தாள் -கலி விருத்தம்
ஈசனுதற் தேசவிழி வீசுபொறி ஆசுகனும்
காசினியில் மாசறுக்கும் ஆசுநதி வாசஞ்செய வீசிடவே
தேசுடைய பீசமதும் சேயுருவம் ஆறெடுத்துப்
பாசமுள ஆறனையர் அன்பதற்குப் பாத்திரமாய் வீற்றிருந்த
நேசமுடைப் பாசுபதன் பாகமொரு வாசஞ்செயும்
தேசுமிகு மாசுனையள் ஆறுருவும் ஓருருவாய் ஆக்கியதால்
மோசஞ்செயும் தானவரின் காலயெலை ஞாலமதில்
தீருமென வானவரும் மானவரும் பூரிப்பில் ஆழ்ந்தனரே
9 சீர் ஆசிரிய விருத்தம்
ஆசுகன்= வாயு தேவன்
மாசறுக்கும் ஆசு நதி = கங்கை
மாசுனை= சரவணப் பொய்கை - பார்வதியின் அம்சம்
மாசுனையள் = பார்வதி
மானவர் = மானிடர்
பீசம் =வித்து
1.
ஊற்றெடுக் கும்கவி யுந்தேற் றுரைக்கு மொழியுமுனைப் போற்றிசைக் கும்பா வுமுறை பொருளின் புகழுருவாய் நேற்றிருக் குஞ்சிந்தை நீக்கி ஒளிதரு நேயனுமாய் வீற்றிருக் குங்கோவில் மேன்மை யுணர்த்தி விளக்கினையே
2.
மாதவா வென்றுமே மாதவர்க் கேற்பன் றுறுதியுடன் மாதவா வென்றுமே லோர்சொற் றகவிர வையகத்தில் மாதவா வென்றுமே கப்பெயர் பெற்று மனங்குளிர மாதவா வென்றுமே வந்துறை இச்சக வாழ்வினிலே
3.
ஐயாறெட் டோது மறிவில்லை யென்று மகமுருகி மெய்யாறுன் நாமம் விளிக்க வுமிலை வினையறுக்கும் பொய்யா மொழிப்பு லவருரை சற்றும் பொருந்தவில்லை உய்யுமா றீனற் குரைப்பா யுழலு முலகினிலே
4.
முருகா குமரா முழுமுதற் கேள்வா முராரிதிரு மருகா பொருதாயே முந்நீர் வறள முரசதிர சருகாய்ச் சிதைத்தா யசுரர் படைகள் தடம்புரள ஒருகா லுனைநான் மறந்தா லுமாற்றெனை உள்ளமர்ந்தே
5.
மாலுற்ற மைந்தன் மனத்தினை மாற்றவல் லானினைவிற் காலற்ற கைவல்யம் கண்டு களித்த சுகமுனித்தாட் பாலற்று வைகலும் பண்பாய்ப் பணியப் பலகவியும் வேலொத்த கண்ணி மணவாளன் நல்குவான் மீச்சிறப்பே
6.
நாடும் பொருளையே நாடி விழுந்தாலும் ஞானமிலாச் சூடு படினும் சுவையில் மயங்கி துதிக்கவல்ல பீடு பொருளைப் பிரானை நினைந்து ருகாதவெனை வீடுறச் செய்யநீ மேற்கொளும் பாடென்னே வேலவனே
7.
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...