திங்கள், 26 பிப்ரவரி, 2024

வேங்கட சுப்பிரமணியர்

சிகியேறும் பாலன் சிறந்தளித்தான் காட்சி சிகிதோகை சூடுஞ் சிறுவ னிகராகப் பூசணியா மண்ணணிப் பூண்கோலங் கண்ணுற்றே மாசி மகத்து மகத்து #வெண்பா

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

திருமணம்

உயிரோ டுலைவைத் துணர்வற் றுலுக்கு
மயர்வுற் றழிய வழைக்குந் - துயரை
யடியோ டொழிவா யறவே விரும்பாய்
படியோ டமைதியைப் பார்

 

 

 

ஒப்பிலியப்பன்

உப்பிலா தூணுண்ணு மொப்பிலி யப்பனுடன் செப்பரிய பூமகளுஞ் செய்யாளு மொப்பனையாய் மார்க்கண்ட ரேத்தி மகிழ்ந்த திருக்கோலம் நேர்கண்டார்க் குண்டோ நிகர் #வெண்பா

ஏரகத்துச் செட்டியாரே

தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா

மாசி மகம்

பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது
பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே
ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான்
மாசி மகத்து மகத்து

#வெண்பா

லலிதாம்பிகை ஜெயந்தி

மாசி மகத்து மகத்தறிந் தேத்துவோங் காசினி யாளுங் குமரியை - ஆசிபெற வாசமல ரென்றே மனமளிப்போம் பத்தியினின் மாசி மகத்து மகட்கு #வெண்பா

வியாழன், 22 பிப்ரவரி, 2024

லலிதாம்பிகை தியான ஸ்லோகம்

 உதிக்குங் கதிரி னுடனிறண் மாணிக்கஞ் சூடுமுடி
மதிக்கும் பெருத்த முலைக்குங் கரமேந் தமுதலர்க்குங்
துதிக்கு மடியர் துயர்தீர் விழிக்கும் வினைத்தொடரைச்
சிதைக்குங் கமலக் கழற்கும் பணிவாந் திருமகளே  

#கட்டளைக்கலித்துறை

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...