திங்கள், 29 ஏப்ரல், 2024

கந்தன் கலித்துறை

மலைத்தே னனைய மலைத்தே விருக்க மலைமலையா யலைத்தே திரிந்து மலுப்பே துமில்லை யலைக்கரையின் றலைத்தே வழைக்கத் தலைத்தேவை சென்று தலைவணங்க னிலத்தே நிலைக்க நிலைத்தே நினைப்பி னிலைமனனே #கட்டளைக்கலித்துறை

சனி, 27 ஏப்ரல், 2024

முழுமோனை மாருதி வெண்பா

செருவிலங்கை செற்ற திருவிலங்குந் தேவற் கொருவிலங்கை யூர்தியா யோங்கு மிருவிலங்க லேந்தி யிறையிருவ ரேல விடம்பெயர்த்த நாந்தொழவே நன்றாகு நாள் #வெண்பா

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

வேங்கட சுப்பிரமணிய வெண்பா

சிவந்த வுடையுடுத்துஞ் சேயனைக் காணப்
பவந்தருமு ரோகம் பறக்கும் - நவந்தரு
நல்வாழ்க்கை நாளெல்லா நாமுணர்வோ மீதிருக்கச்
சொல்வாழ்வி லுண்டோ துயர்

வியாழன், 25 ஏப்ரல், 2024

அமைப்பிற்கு வெண்பா

வினைப்பற்று வேண்டாது மேதினியில் வேலை
நினைப்பெற்று நீங்காது நின்றாற் - றனைப்பற்றுந்  
தாழ்வறியாச் சான்றோரின் றக்க தலைநெறிகள்
வாழ்வறியா மாண்பு வகுத்து


வினைப்பற்று வேண்டாது மேதினியில் வேலை
நினைப்பு எற்றும் நீங்காது நின்றால் தனைப் பற்றும்
தாழ்வு அறியாச் சான்றோரின் தக்க தலை நெறிகள்
வாழ்வறியா மாண்பு வகுத்து   

கந்தன் கலிவிருத்தம்

ஈன்றவென்னை யான்றசொல்லான் மூன்றுபோதுஞ் செப்பவே மூன்றுகண்ணர் கான்றெழுந்த சான்றுரைக்க வொப்பிலா மூன்றிரண்டு தோன்றுமங்கை ஈன்றபாலன் றப்பிலாத் தான்றடுத்து மூன்றுணர்த்தி நான்றமிழ்செ யேற்பனே #கலிவிருத்தம்

செவ்வாய் வெண்பா

முந்தை வினையகல நந்தை தினத்தாள்வோன் எந்தை முருகனுக் கேற்றவாறு தந்தளிக்க விந்தை தமிழ்ப்பாவை மேன்மை மனநிறுத்திச் சிந்தை சிறந்திடச் சொல் #வெண்பா 

நந்தை -சஷ்டி

'சிந்தை சிறந்திடச் சொல்' 

ஈற்றடிக்காக அமைத்த வெண்பா  

வேலன் வெண்பா

 

நினைப்பேற்றுங் கந்த னிறைநாமஞ் செப்பன் முனைபற் றருமை முயல்வு - நினைப்போற்றும் பாவாசை யொன்றே பகரவருள் பத்தற்கு மூவாசை நீக்கு முருகு #வெண்பா

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...