செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருச்சீரலைவாய்

 மாரனை நாடாது வாலிபம் வேறேது 

மாதுளம் காணாது மானுட வாழ்வேது                             அதுபோலே
 

சூரனை போரூடு சூடிய வேலோனை 

தூமலர் தாளோனை தாரணி மார்போனை                  மனதாலே
 

காருமை பாலோனை கார்த்திகை மேலோனை 

காதலில் சேராமல் கானகம் போவேனோ                        ஒருநாளே
பாரலை ஓயாத பாதகம் நேராத 

சீரலை வாயாளும் வானவர் கோமானின்                     மருகோனே

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

கட்டளைக்கலித்துறை

1.

 முப்புரி மாற்று முழுமதி நாளில் மனமுருகி முப்புரஞ் செற்ற முழுமுதற் கேள்வன் உளநிறுத்தி அப்பணி நாத னழகுக் குமர னடிதொழுதே ஒப்பிலி பத்தி யுருகொளச் செய்வா யுளத்தினிலே

 

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அருணகிரிநாதர் புகழ் போற்றி

  படம்

ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ

 

பத்திராசலம் இராமர் விருத்தம்

May be an image of text

 

ஏது மற்றவர் ஏழை எளியவர்

ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக

ஈரி லற்றவர் ஏக சொற்றவர்

வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா


மாதை யற்றதோ ரூறை யற்றுற

ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ

வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி

ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே

சனி, 22 ஜூலை, 2023

திருப்போரூர் கந்த சுவாமி

ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு

Murugan Temple Tirupporur, India | Best Time To Visit Murugan Temple 

திருவாடிப் பூரம்

படம்  

வாரண மாயிரம் வடிவா யமைத்து நாரண னம்பியி னற்கரம் பிடித்து ஆரண மனைத்து மடங்கு விதமாய் ஏரணந் தவறா இறைவி பகர்ந்தாள் -கலி விருத்தம்

சனி, 3 ஜூன், 2023

வைகாசி விசாகம்

 

ஈசனுதற் தேசவிழி வீசுபொறி ஆசுகனும்
காசினியில் மாசறுக்கும் ஆசுநதி வாசஞ்செய                வீசிடவே
 

தேசுடைய பீசமதும் சேயுருவம் ஆறெடுத்துப்
பாசமுள ஆறனையர் அன்பதற்குப் பாத்திரமாய்          வீற்றிருந்த

நேசமுடைப் பாசுபதன் பாகமொரு வாசஞ்செயும்
தேசுமிகு மாசுனையள் ஆறுருவும் ஓருருவாய்                ஆக்கியதால்

மோசஞ்செயும் தானவரின் காலயெலை ஞாலமதில்
தீருமென வானவரும் மானவரும் பூரிப்பில்                      ஆழ்ந்தனரே

9 சீர் ஆசிரிய விருத்தம் 



ஆசுகன்= வாயு தேவன்
மாசறுக்கும் ஆசு நதி = கங்கை
மாசுனை= சரவணப் பொய்கை - பார்வதியின் அம்சம்
மாசுனையள் = பார்வதி
மானவர் = மானிடர்
பீசம் =வித்து 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...