மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவன்
-வஞ்சித்துறை
மாதுவந்தார் மாதேகத் தாமைமா வெண்கலக்கோ காதைக்கூ காப்புளப் போருவக பங்கயப் பாதவுள வேணுருகு குன்றகன் றாநிமல பாதகத் தீருலகு தா இன்னிசை வெண்பா #கரந்துறை #காதைகரப்பு
பாவியுரி தேசவுடை பாததலை வேயவிரு மேவுதரு தேவ வினியலை - யாவி சிரகவி தூய சிவகலை யோதி யரிவபுவ ரற்குடி லை -நேரிசை வெண்பா #காதைகரப்பு
கல்வியணி செய்துன்ன கையுள்வா ரானையு முந்திகத்தை யேறானை யோகவுயர் நாரவி யம்பா ளுமைநா விலணு கநய புனைவு விதித்த கவி #வெண்பா #காதைகரப்பு
வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை -கலி விருத்தம்
வஞ்சிக் கொடியி னெஞ்சத் துறையும்
வந்தித் தருளு நந்திக் குமரன்
மன்றத் தமருங் குன்றத் தலைவன்
மன்னித் தருளும் கன்னித் தமிழன் புகழ்பாட
செஞ்சொற் றரவே சிந்தை புகவே
தெள்ளத் தெளிவாய் வள்ளி மலைவாழ்
உள்ளத் துறையும் வெள்ளத் தமிழால்
செல்லத் துறவி மெல்லப் புனைந்த கவிபாடி
வஞ்சத் துறையும் நெஞ்சைத் துலக்கி
வண்ணக் கவியின் பண்ணைச் செபிக்க
அன்னைத் தமிழின் கன்னற் சுவையை
அங்கத் துறைய அள்ளிப் பருக அருளாயே
கஞ்சத் தமரும் வஞ்சித் தழுவும்
நெஞ்சத் துடைய நந்தன் மகனின்
கொஞ்சித் திரியும் அங்கண் மகளின்
நெஞ்சத் தணையும் சென்னிக் கிரிவாழ் பெருமாளே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...