செருப்புக்கு நாடா டிறனை யளிதன் விருப்புக் கிடமே விடாத - திருப்புக் கிளையாழ்வான் வாழ்ந்த விணையிலா வூரின் விளையாள்வான் மீள்விளக்கு மாறு
செருப்புக்கு நாடா டிறனை யளிதன் விருப்புக் கிடமே விடாத - திருப்புக் கிளையாழ்வான் வாழ்ந்த விணையிலா வூரின் விளையாள்வான் மீள்விளக்கு மாறு
விடுதலை மாயும் விதியெரிப் பாயும் சுடுதலை யேற்கு முடறா - னடுவிற் சரமாரித் தீவேள்வி சார்ந்துரைக் கேட்குங் கருமாதி கல்யாண மொன்று #வெண்பா
விடுதலை மாயும் விதி எரிப் பாயும்
சுடுதலை ஏற்கும் உடல் தான் நடுவில்
சரமாரி தீ வேள்வி சார்ந்து உரைக் கேட்கும்
கருமாதி கல்யாணம் ஒன்று
பா வகை (poetic metre): வசந்த திலகா
ஆதிசங்கர பகவத்பாதர் அவர்கள், “வசந்த திலகா”
என்னும் பாவகையினை வடமொழில் கையாண்டுள்ளார்.
அதே பாவகையை தமிழில் முயன்று
மொழியாக்கம் செய்யும் ஒரு சிறு முயல்வு.
1.
கங்கைத் திரைச்சடை யணிந்த வணங்கு மானே
மங்கைக் கிடப்புற மளித்த நிரந்தரா வெண்
சங்கைத் தரித்த திருமாற் பிரியா மலர்வே
ளங்கத் தழித்த பர காசி வி விஶ்வநாதா!
ஆறுடுத்து மாலகண்ட ராடவத்தை வானவ
ராடவைக்க வேளனுப்பி வாளியேவித் தானவர்
சீறொடுக்கத் தேவியொத்துச் சேயுதிக்கக் கூடவே
தேறமர்ந்து கூடிபேசிச் சீரெடுத்துச் சாரவ
ரூறொழித்து மீளெடுக்க வானிலத்தைத் தானவர்
நேரெடுத்த வாணவத்தை யேறெடுத்துத் தீயினா
னீறழிக்க நீலகண்டர் தீவிழிக்க வாறின
ராறுதிக்கு மாசிதோன்ற றானுதிக்க வேண்டுமே
கரிமுனி பகரக் கரிமுக னெழுதக்
கடலொலி யெழுப்புங் கலைநதியு
மிருநில முலர விபமுகன் குளிரப்
பெருநிலத் தடியின் மறைந்தோடப்
பெருவரை யதிரப் பெருமைக ளுணரப்
பிறங்கொளி பரவுங் கதிராகக்
குருவரு ளணுகத் திருவரு ணுழையக்
கருமமு முணர வறவாழ்விற்
குருகுல மழியக் குணவதி மகிழச்
செருவிடை யுரையைப் பரந்தாம
னரகுல முயர நடவழி யுணர
நமதிடை புலரப் பணியானே
வரிவடி வுலகு வகைவகை யுளவும்
வடிவழ குடனே வடித்தானே
திருவடி யுறையச் செறுகலி யொழியத்
தினமுறை தொழுவோ மறைநூலே
மாறான் முழுமுதற் றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாமறையே மாறுதித்த மாறான் முழுமுத றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாண்பு
மாதுறையு மார்பழகன் மாதரியா யன்றுவந்த மாதறியா தேங்கவைக்கு மாமாயன் - யாதொருவர் மாதிரியே கூறவொணா மாதொருத்தி காத்திடவே சேதமுறச் செய்தவனாந் தீவு #வெண்பா
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...