வியாழன், 25 ஏப்ரல், 2024

வேலன் வெண்பா

 

நினைப்பேற்றுங் கந்த னிறைநாமஞ் செப்பன் முனைபற் றருமை முயல்வு - நினைப்போற்றும் பாவாசை யொன்றே பகரவருள் பத்தற்கு மூவாசை நீக்கு முருகு #வெண்பா

திங்கள், 22 ஏப்ரல், 2024

மதுரகவியார் துதி

பதினொன்றே பாடியும் பன்னீரி லொன்றானப் பாகுகவி பதியென்ற மாலனைப் பாடாது மொன்றானாய்ப் பன்னிரண்டி னதிநின்ற தென்குரு கூர்நம்பி யேகொண்டாய் நாதனென கதியென் றுனக்கானக் காரிமா றப்பிராற் கண்டுவந்தே #கட்டளைக்கலித்துறை

சனி, 20 ஏப்ரல், 2024

இராமன் கதை கேளுங்கள் வெண்பா

பால விளவரசன் பார்மகளைக் கைப்பிடித்த ஞாலத் தலைவ னவமிதனில் - வாலி மராமர மேழுமொரு வம்பெய்தி வீழ்த்து மிராமன் கதைகேளுங் கள் #வெண்பா

வியாழன், 18 ஏப்ரல், 2024

மாறன்றுதி

மாறானை மாறிலா மங்கையாய்த் தன்னை மனமுவந்து மாறான் றனக்கு மனநீக்க மாறன் முறைதொழுவே மாறான் மறுப்பனோ மாட்டானே மாறனை மார்பணைப்பான் மாறானின் மார்புறை வாள்மா ணவனன்றோ மாறனுமே #கட்டளைக்கலித்துறை

இராம நவமி விருத்தம்

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

அலைகட லஞ்ச கணைதொடு வெந்தை
    யகிலமு தித்த திருநாளி

லறுசுவை யுண்டி யடையவி ரும்பு
     மனமுள வன்பர்  பலராவா

ரிலைகணி ரம்ப வினியவை யுண்ண
    விதவுரை சிந்தை தனையாள

விரவிய ரன்பு குலதில கன்ற
   னிகரிலி நின்ற கதைகேளாய்

தலையிரு வைந்து நிசிசர னற்றுத்
    தரையினி லம்பு விழயேவி

தனிவிற லங்கை நனிவலி பெற்ற
   சகதல மங்கை துணைவோனை

முலைகடி புள்ளை யொருவிழி கொய்த
   முழுமுத லண்ண லுளமார

வொருமுக மண்ட சிரதுதி செய்து   
    பிறகுரு சிக்க பலனாமே     

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய #விருத்தம் 

செவ்வாயிற் செவ்வேள்

செஞ்சொற் புனைய சிறந்த தமிழிற் றிரையெழுந்த
நஞ்சைக் கழுத்தி னகையா யணியு நடவரசற்
கொஞ்சுப் புதுல்வன் குருவா யமர்ந்த குமரன்றனை
நெஞ்சத் தமர்த்தி நிதமு நிறைய  நிலையருளே

#கட்டளைக்கலித்துறை  

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

கந்தன் கலி விருத்தம்

 

பொருப்பணைந்து போற்றியுன்னைப் பாட்டிசைக்க வில்லையே

நெருப்பணைந்த வேதவேள்வி நெருங்ககூட வில்லையே

விருப்பணைந்து நோற்றுநாளு மேன்மைகொள்ள வில்லையே

இருப்பினெந்தை வள்ளிநாத வேற்றமீன்ற வள்ளலே

#கலிவிருத்தம்

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...