செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

பூவைவண்ணன் கலி விருத்தம்

பூவைவண்ணன் பூத்தொடுத்த பட்டர்பிரான் தோன்றலே
பாவைவண்ணப் பாத்தொடுத்த பாவையெங்கள் பாவையே
நாவைவண்ணஞ் சீரமைக்கு நாளுமுன்றன் பாடலே
கோவைவண்ணஞ் சீரமைத்த கோதையென்றும் வாழியே   

கலி விருத்தம் 

முக்கனியைச் சாறாக்கி வெண்பா

முக்கனியைச் சாறாக்கி முத்தமிழாய்ச் சீரமைத்த
முக்கணவன் மைந்தா முருகுருவே - தக்கவொரு
பாட்டிசைத்துத் தாள்பணியப் பார்த்தருள்வா யாழ்ப்பாணர்
மீட்டிசைக் கேற்ற விலக்கு

செவ்வாயிற் செவ்வேள் கலி விருத்தம்

இறையென் றுணர்வா ரிசைவைப் பெறுவார்
நிறையென் றுணர்வார் நினைவைப் பிரியார்
குறையென் றுறைவார்  குகனைத் துதியார்
முறையென் றுரைவா  முருகா வுனையே   

தலைபத்துதிர கலி விருத்தம்

தலைபத் துதிரக் கணைவிட் டவரா
மலையிற் றுயிலுந் திருமான் மருகா
நிலையற் றுழலும் விதிபற் றடியேன்
கலியைக் களையுங் கவிபற் றருளே 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

திருவிலங்கை கலி விருத்தம்

திருவிலங்கை நோக்கழிக்கத்  திறனுடைத்த ளாயினுந்
திருவிலங்க னாதர்வந்து செருவிலங்கை வென்றிடத்
திருவிலங்கை யேற்றுவந்த பொறையுடைத்த தேவிநீ
திருவிலங்கை கருவிலங்கை யிருமைநீக்கி வீடளீ

திருவிலங்கை வெண்பா

திருவிலங்கை தீயத் திருவிலங்கை யேவித்
திருவிலங்கை நீக்கத் திருந்தா திருவிலங்கை
யின்றுபோய் நாளைவா வென்றுரைத்து வென்ற
திருவிலங்கை நாமமே தீர்வு
#வெண்பா

சனி, 3 ஆகஸ்ட், 2024

மண் கடந்து கலி விருத்தம்

மண்கடந்து விண்கடந்து கண்கடந்த மாணியா
யொண்கடந்தி ருள்கடந்து வெளிகலந்த வுள்ளுமாய்
திண்கடந்து நுண்கடந்து சித்தினோட சித்தூமா
யெண்கடந்த வீசவுன்னை யாவர்காண வல்லரே   

 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...