சனி, 14 டிசம்பர், 2024

சென்றதினி மீளாது

 

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி திருவிழாவிற்குச் சென்றதினி மீளாது என்ற தலைப்பில் எழுதிய கவிதை 
 

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தயிரெடுத்து கலி விருத்தம்

 தயிரெடுத்துத் தின்றபோது வெண்மையான மீசையோ

 கயிறெடுத்துக் கண்ணிகட்டக் காயமேவு காயமோ

 மயலெடுத்த வாயர்மங்கை சொக்கநின்ற மூர்த்தியோ

 செயமுடைத்து விசயன்வெல்லத் தேர்நடத்து பாகனே

புதன், 11 டிசம்பர், 2024

பாரதிக்கும் ஆனந்திற்கும் ஒரு பிறந்த நாள் வாழ்த்து வெண்பா

பாரதிப வானந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போரேறே பல்லுலகுந் - தீரறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையநீ வந்ததினந்
தூரிகையாற் சொல்லை வரைந்து

#வெண்பா #சிலேடை

செவ்வாய், 10 டிசம்பர், 2024

இம்மை செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

இம்மை மறுமை யிரண்டு மருள்புரிந்து
நம்மை வழிநடத்து நாயகன் - செம்மை
யுருவன் சிரமா றுடைய னமரு
மொருமயிலை யுள்ளநிறை யோர்ந்து

#வெண்பா

வியாழன், 5 டிசம்பர், 2024

தமதுவேட்கை கலிப்பா

 

தமதுவேட்கை யுருவெடுக்கக் கடிகைநேரங் கடிகையின்
மமதையற்ற தவமமர்ந்து மனமுவந்து பத்தர்கள்
கமலமொத்த விழிதிறக்குங் கதியளிக்குங் கார்த்திகை
யமுதவல்லி யுடனிருக்கும் யோகசிங்கங் காண்பரே
 
#தரவுகொச்சகக்கலிப்பா
 
 

பிரமனாக கலிப்பா

 

பிரமனாகத் தவமியற்று பவனநந்தன் மலையிது
பரமனாகப் புரியொடாழி கரமணிந்த கோலமா
யரவணைந்த திருவரங்கன் கரமுயர்ந்த சார்ங்கனும்
வரமளிக்க வுடனிருக்க வடிவமைந்த கடிகையே
 

திங்கள், 2 டிசம்பர், 2024

செவ்வாய்த் திருமகன் - செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செவ்வாய்த் திருமகனை யெவ்வா றிசைத்துரைக்க
வொவ்வாத வற்றை யொழித்துயர - வவ்வா
றறிந்தா லெடுத்துரைப்பீ ரான்றோர்கா ணானுஞ்
செறிந்த தமிழ்செய்ய சீர் 

 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...