தீராக் குறைதீர்க்குஞ் செவ்வே ளிருக்கவிங்
கோரா தவன்புகழை யுற்றபயன் - நேரேது
மில்லாப் பரிதிநமக் கீந்த கொடைவிளங்கா
நில்லா நிழற்றுதிக்கு நேர்
தீராக் குறைதீர்க்குஞ் செவ்வே ளிருக்கவிங்
கோரா தவன்புகழை யுற்றபயன் - நேரேது
மில்லாப் பரிதிநமக் கீந்த கொடைவிளங்கா
நில்லா நிழற்றுதிக்கு நேர்
அங்கமேவு பணியணிந்த கங்கைநாதன் பங்கின
ளங்கைதங்கு சங்குசாடு செங்கணாதன் பங்கின
டுங்கவேத னாற்றலான தூயஞான மங்கையுஞ்
சிங்கவேறு நங்கையென்ற சித்தமேவ முத்தியே
காலமென்ற கூறுதிக்க மூலமான தத்துவ
ஞாலமன்று நன்குதிக்க ஞானமான தத்துவஞ்
சீலநன்று சேர்ந்திருக்கத் திருவுடைத்த தத்துவங்
கோலமொன்று கூறுமூன்று காளிவாணி திருவலோ
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...